ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், திர்த்வால் பகுதியில் 104 அடி உயர தேசியக் கொடியை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நிர்மாணித்துள்ளது.
ராணுவத்தின் 15-வது படைப்பிரிவின் ஜெனரல் கமாண் டிங் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் இந்த தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் இந்தக் கொடி உள்ளது. இதற்கு அஸ்மத்-இ-ஹிந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. எதிரிகள் மற்றும் இயற்கையிடம் இருந்து பல சவால்களை கர்ணா பள்ளத்தாக்கு எதிர்கொண்ட போதிலும் நிமிர்ந்து நிற்கும் கர்ணா பள்ளத்தாக்கு மக்களின் மன உறுதிக்கு சான்றாக இது விளங்குகிறது என்று ஜம்மு காஷ்மீர் ராணுவ உயரதிகாரி தெரிவித்தார்.