சுற்றுலாப் பயணிகளுக்கான பவன் கட்டுவதற்கு ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெறவுள்ளது.
மகாராஷ்டிரா பவனை மத்திய காஷ்மீரில் உள்ள புத்காமில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இச்காமில் 2.5 ஏக்கர் நிலத்தில் மகாராஷ்டிர பவன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலத்தை ரூ.8.16 கோடிக்கு மகாராஷ்டிர அரசுக்கு வழங்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றிருந்தபோது துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்துப் பேசினார்.அப்போது, நிலத்தை வாங்குவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டதாக ஊடகத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக, ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். ஆனால். அந்தப் பிரிவுரத்து செய்யப்பட்டதற்கு பிறகுதற்போது இந்தியாவில் வசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அங்குநிலங்களை வாங்க முடியும்.