காலம் மாறிப்போச்சு கருப்பு வெளிறிப் போச்சு

சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் 1971 ஜனவரி 24 அன்று திராவிடர் கழகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் ஹிந்து தெய்வங்கள், குறிப்பாக முருகன், ராமபிரான், ஐயப்பன், இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் கடந்த ஒரு வாரமாக தமிழக ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது. திராவிடர் கழகத்தினரின் மன்னிப்பு கோரும் மனப்பான்மை அம்பலத்துக்கு வந்திருப்பது பலருடைய கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது. அதாவது திகவினர் ராமர் படத்தை செருப்பால் அடித்தது உண்மை.

அந்த சம்பவம் பற்றிய செய்தியை அப்போதைய துக்ளக் புகைப்படங்களுடன் வெளியிட்டது. அதை துக்ளக் ௫௦வது ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். வீராவேசமாக களத்தில் குதித்த திக பாசறையினர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு மூக்கறுபட்டு நிற்கிறார்கள்.

 அன்றைய துக்ளக் தடை செய்யப்பட்டது குறித்து பின்னாளில் பாரத பிரதமர் ஆன அடல் பிகாரி வாஜ்பாய் இவ்வாறு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவது பற்றி பத்திரிகை கவுன்சில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்று கோரியிருந்தது தியாகபூமி வார ஏடு செய்தியாக வெளியிட்டிருந்தது.

 இது தவிர அந்த சேலம் சம்பவத்தை கண்டனம் செய்து சேலத்தில் 100 ஜன சங்கத்தினர் இந்து அமைப்புகளின் ஊழியர்கள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 ஆற்காட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றிகரமாக முழுஅடைப்பு நடந்தது.

 மதுரை நகராட்சி மன்றத்தில் சேலம் சம்பவத்திற்கு கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு சேலம் சம்பவம் நடந்த மறுவாரம் மாநிலம் தழுவிய அடைப்புக்கு அறைகூவல் விடுத்தது.

 இந்த செய்திகள் 1971 ஜனவரியில் வெளிவந்த தியாகபூமி இதழ்களில் இடம் பெற்றிருந்தன.

One thought on “காலம் மாறிப்போச்சு கருப்பு வெளிறிப் போச்சு

Comments are closed.