கான்ஸ்டபிள் வடிவத்தில் கடவுள்

அவசர அழைப்புக்கு 100 என்கிற எண்ணை அழுத்தாமலேயே. உதவிக்கரம் நீட்டிய புண்ணியவான் இந்த போலீஸ் கான்ஸ்டபிள்.

கோவிட் சமயங்கறதுனால பிரசவ காலத்தை ஒரு மாசம் தள்ளிவச்சுக்க முடியுமா என்ன???பிரசவவலியில் துடித்த அப்பெண் எப்படியோ 7கிலோமீட்டர தூரத்திலுள்ள மருத்துவமனையை அடைகிறாள். மருத்துவர் பிரசவவலி கண்ஞட பெண்ணுக்கு இரத்தம் உடனே அவசியம் என்கிறார். அவசர தேவை யுணர்ந்த அவளது கணவன் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு இரத்தம் கேட்டு ரஸ்தாவில் இறங்கியாச்சு..144மீறி சென்றதனால் போலீஸ் துருவித்துருவிக் கேள்விமழை.. ஆழிமழைக்கண்ணன் அதே கான்ஸ்டபிள் வடிவில் உதவிக்கரம் நீட்டினார்.எப்படி?? பெண்ணின் இரத்த க்ரூப்பும் காவலர் இரத்த க்ரூப்பும் ஒன்றே..சடுதியில் களமிறங்கத் தயாராகிவிட்டார் கான்ஸ்டபிள்…மருத்துவமனை விரைகிறார்.இரத்தம் கொடுத்தார்..பெண்ணுக்கு சுகப்பிரசவம்விஷயமறிந்த போலீஸ் ஸூப்ரண்டண்டண்ட் கான்ஸ்டபிளைப் பாராட்டி  1000ரூபாய் பரிசளிக்கிறார். கான்ஸ்டபிளின் சீரிய பணியைப் பாராட்டி .த. நா. டி.ஜி.பியும் 10,000 ரூபாய் வெகுமதிகள் கொடுத்தார். கான்ஸ்டபிளின் கருணை அதோடு நிற்கவில்லை ஸ்வாமீ…தனக்குக் கிடைத்த 11000ரூபாய் மற்றும் வெகுமதி அனைத்தையும் பிரசவபில்லுக்காக அந்த பெண்மணியிடமே கொடுத்து விட்டார் 23வயது யுவனான அந்த கான்ஸ்டபிள்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி