காத்திருந்த கடவுள்

சங்கீத வித்வான்களில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் அவதரித்தார் , ஸ்ரீராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவர் . தனது வாழ்நாளில் 1 கோடி ராம நாமத்தை 21 வருடங்களில் ஜபம் செய்து முடித்திருக்கிறார் . சராசரியாக தினமும் 1.25 லட்சம் ராம நாமம் ஜபித்துள்ளார். இதன் பலன்  ராமபிரானை பலமுறை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்.
தியாகராஜர் சித்திரைத் திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் சென்றிருந்தார் . அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்தார் , அவர் இருந்த வீதி வழியாக ஸ்ரீரங்கநாதர் பொன்னால் ஆன குதிரை வாகனத்தில் உலா வந்தார் அவரை தரிசிக்க விரும்பிய தியாகராஜர் வாசலில் நின்று வணங்கி கீர்த்தனைகனை பாடிக் கொண்டிருந்தார்.  அவர் வைாமியை முழுமையாக தரிசிப்பதற்கு முன்பே வாகனம் அடுத்த தெருவுக்கு திரும்பிவிட்டது . தியாகராசரால் தரிசிக்க முடியவில்லை ,
இதையடுத்து நடந்ததுதான் ஆச்சரியம் அடுத்த தெருவுக்குள் நுழைந்த ஸ்ரீரங்களின் வாகனம் அதற்கு மேல் ஓர் அடி கூட நகரவில்லை . அப்போது அங்கு இருந்த பட்டாச்சார்யார் ஒருவர் மேல் அருள் வந்தது . ‘ என் பரம பக்தனான தியாகராஜன் என்னை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் நிற்கிறாள் . அவனை அழைத்து வந்து என்னை தரிசிக்க செய்யுங்கள் , லைலாம் நலமாகும் என்றார் அவர் உடனே ஆலய அதிகரிகம் , தியாகராஜ குறித்து விசாரித்து அவரை அழைத்து வந்தனர் அவர் வந்து ஸ்ரீரங்கனை கீர்த்தனை பாடி தரிசித்தார் . அதன்பிறகு சுவாமி ஊர்வலம் நகர்ந்தது