காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவால் வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா – லண்டன் நீதிமன்றம் தகவல்

விஜய்   மல்லையா வழக்கை லண்டனில் விசாரித்த அந்த ஊர்

காங்கிரஸ் ஆட்சியின் (2004 – 2014) யோக்யதையை இன்று விஜய் மல்லையா வழக்கை லண்டனில் விசாரித்த அந்த ஊர் ஜட்ஜ் ஓவர் டைம் போட்டு காரித் துப்பியிருக்கிறார்.

இதில் நம்ம ஊர் லிபரல்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது லண்டன் கோர்ட் பாரதத்திலிருந்து 6500 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு அந்த கோர்ட்டுகளை பிஜேபியோ.. மோதிஜி-அமீத்ஷாஜியோ.. மிக மிக முக்கியமாக ஆர்.எஸ்.எஸோ கட்டுப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது.

வெள்ளிக் கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ஜஸ்டிஸ் எம்மா அர்பனாட் (Justice Emma Arbaughnott) கூறியதாவது.. “இந்தியாவில் இருக்கும் வங்கிகள் தாங்களே தங்களின் வங்கி விதிகளையும் அதன் விதிமுறைகளையும் விஜய் மல்லையாவின் ஏர்லைன் கம்பெனியான கிங்ஃபிஷருக்குக் கடன் கொடுத்தபோது முழுமையாக #மீறியுள்ளனர். இதனை யாரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம்” என்று கூறியுள்ளார்.

அதோடு இந்தியாவின் அப்போதைய பிரதமரான மன்மோஹன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் வங்கிகள் மறுத்த போதிலும் விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளனர். பல வங்கிகள் இதே விஜய் மல்லையாவை #ப்ளாக் #லிஸ்ட் செய்திருந்த போதிலும் அவர்களுக்கெல்லாம் வாய் மொழியாக கட்டளையிட்டு கடன் கொடுக்கும்படி காங்கிரஸ் அரசு நிர்பந்தப்படுத்தியுள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளது லண்டனின் வெப்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்.

ஆகவே, வெள்ளிக்கிழமை ஜட்ஜ் எம்மா அர்பனாட்வெளிப்படையாக இந்திய வங்கிகள் விஜய் மல்லையாவிற்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றியும் அதில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களைப் பற்றியும் விவரித்துள்ளார். அதோடு, இந்த வழக்கில் வங்கிகளை தங்கள் அதிகாரத்தால் அடி பணியவைத்த அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், ப.#சிதம்பரமும் மட்டுமே இந்த ஊழலுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தான், பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா என்று அழுத்தந்திருத்தமாக கூறியுள்ளார்.

இப்போது சோனியா காந்தி தனக்கும் எதற்குமே சம்பந்தமில்லை என்று நழுவி விடுவார். ஆனால், வங்கிகளால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்ட விஜய் மல்லையாவுக்கு மேலும் மேலும் கடன் கொடுக்கும்படி அதே வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்த அப்போதைய பிரதமரும் நிதி மந்திரியுமான மன்மோஹனும் ப.சிதம்பரமும் இதற்கென்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

இப்போது ப்யூட்டி என்னவென்றால்.. நம் இந்திய ஊடகங்கள் இந்த லண்டன் கோர்ட் ஜட்ஜின் அறிக்கையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல், மக்களை தூண்டி விட மட்டும் விளாவாரியாக மணிக் கணக்கில் விவாதிப்பார்கள்…!

Source  :

https://m.telegraphindia.com/…/what-london-magi…/cid/1678394


 ஸ்ரீவில்லிபுத்தூர்  எஸ்.  ரமேஷ்.

எண்  8   தெற்கு  மாட  வீதி,

ஸ்ரீவில்லிபுத்தூர்.

விருதுநகர்  மாவட்டம்…அ. கு.  626125