குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு ஆதரவாகவும், இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் திமுக உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும் பாஜக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளு வர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு எதி ரானது என்பதுபோல திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள் ளிட்ட கட்சிகள் வேண்டுமென்றே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே முஸ்லிம்களை போராட்டத்துக்கு தூண்டி வரு கிறார்கள். இந்தியாவில் இருந்து மத ரீதியாக பிரிந்து சென்ற பாகிஸ் தான், வங்கதேசம், ஆப்கானிஸ் தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்துதலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்ச மடைந்துள்ள சிறுபான்மை மத்தின ருக்கு குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

அரசியல் ஆதாயம்

நாட்டு நலனுக்காகவே இச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதை வைத்து முஸ்லிம்களையும், மாண வர்களையும் தூண்டி அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சிக் கிறது. திமுகவை நம்பி மோசம் போக வேண்டாம் என்று முஸ்லிம் சகோதரர்களையும், மாணவர் களையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது, ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்றெல்லாம் திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. ஈழத் தமிழர் களுக்கு திமுக செய்த துரோகத்தை ஒருநாளும் மறைக்க முடியாது. ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சி யுடன் இணைந்து இன்று திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜகவுக்கு எதிராகப் போராட முஸ்லிம்களை தூண்டி விடுபவர்களின் எண்ணம் ஒரு நாளும் வெற்றி பெறாது” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.வி.ஹண்டே, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மாநிலத் தலைவர் பாத்திமா அலி, தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் எம்.இப்ராகிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.