காங்கிரஸ் சுமத்திய கறை நல்லது!

திருடனுக்கு பார்ப்பவர்களெல்லோரும் திருடனாகத் தான் தெரிவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஊழலில் முக்கித் திளைத்த காங்கிரஸ் கட்சிக்கு, ரஃபேல் போர் விமான பேரத்தில் சந்தேகம் கிளம்பியது அதனால் தான். ஆனால், ஆட்சியில் இருப்பவர் ராஜீவ் காந்தி அல்லவே, நரேந்திர மோடி ஆயிற்றே. எனவே தான், காங்கிரஸ் உள்ளிட்ட பலரின் பொய்ய்ப்புகார்களை உச்ச நீதிமன்றம் இரண்டாவது தடவையாக புறந்தள்ளி இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட போவிமான பேர ஒப்பந்தம் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளால் செய்யப்பட்ட புழுதி வாரித் தூற்றும் பிரசாரம் இதன்மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று கீறல் விழிஉந்த ரெக்கார்டு போல புலம்பிக்கொண்டிருக்கிறார் ராகுல். 2024லும் கூட காங்கிரஸ் கட்சி தேறும் வழி தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் சில முக்கியமான அம்சங்களை நினைவுபடுத்திக் கொள்வது, உச்சந் ஈதிமன்றத் தீர்ப்பின் பின்னணியைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவத்திடம் போர் விமானங்கள் வாங்க பேச்சு நடைபெற்றது. 2012 ஜனவரியில், 126 போர் விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்குவதற்கான ஒப்பந்தம் தயாராக இருப்பதாக பாதுகாப்புத் துரை அமைச்சகம் அறிவித்தது. அதில் 18 விமானங்கள் முழுமையான விமானங்களாக அளிக்கப்படும். 108 விமானங்கள் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனத்தில் டஸ்ஸால்ட் நிறுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தம் 40 ஆண்டு கால வரையறை கொண்டது என முடிவானது.

அந்த ஒப்பந்தத்தின் இறுதி மதிப்பு ரூ. 1,86,000 கோடி என்று டஸ்சால்ட் அறிவித்தபோது இந்திட அரசு தயங்கியது. அந்த அளவுக்கு நிதிநிலை இல்லை என்பது முக்கியமான காரனம். அடுத்து, ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் தயாரிக்கப்படும் போர் விமானங்களின் தரத்தை உறுதிப்படுத்த டஸ்ஸால்ட் மறுத்தது இரண்டாவது காரணம். இதனை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2014 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தவுடன் காட்சி மாறியது. 2015 பிப்ரவரியில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்தாகும் நிலையில் இருப்பதாக அப்போதைய பாதுகாப்ப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார். முந்தைய ஒப்பந்தம் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேசமயம், 2015 ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்தபோது, இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதாக பிரதமர் அறிவித்தார். இந்த ஒப்பந்தமானது 36 போர் விமானங்கள் மட்டுமல்லாது, அதன் இணைப்பான ஆயுதங்கள் தொடர்பான கூடுதல் அம்சங்கள் கொண்டதாக இருந்தது.

வெளிநாடு சென்ற பிரதமர் தன்னிச்சையாக, பாதுகாப்பு அமைச்சகத்தை ஆலோசிக்காமலே போர் விமானங்கள் வாங்குவதாக அறிவித்ததில் ஊழல் இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியது. அதை பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் மறுத்தார். இதுதொடர்பாக ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சக மட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டஸ்சால்ட் இணைந்து இந்த 36 போர் விமானங்களையும் தயாரிக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்காக டஸ்சால்ட்- ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ர நிறுவனம் 2016 அக்டோபரில் 51:49 பங்களிப்பு என்ற அடிப்படையில் துவங்கப்பட்டது.

இத்அனை எதிர்க்கட்சிகள் குறை கூறின. இந்திய அரசு நிறுவனமான ஹெச்.ஏ.எல். இருக்க்ம்போது, அனுபவம் இல்லாத தனையார் நிறுவனத்துக்கு இந்த கூட்டு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது ஏன் என்று அவை கேள்வி எழுப்பின. அதற்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடம் அந்த லவு முடஹ்லீடு செய்ய வழியில்லை என்று அரசு பதில் அளித்தது.

இதனிடையே கோவா மாநில அரசியல் மாற்றத்தால் (2017), மனோகர் பார்க்கர் அங்கு முதல்வராகப் பொறுப்பேற்றதால், நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனார். மேலும், பாரிக்கர் உடல்நலம் குன்றியதால் அதிக அளவில் பேச முடியாதவர் ஆனார்.

அப்போது முந்தைய அரசை விட அதிக விலைக்கு போர் விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்ட்டியது. உண்மையில் காங்கிரஸ் அரசு ஒப்ப்பந்தம் செய்தபோது அதன் விலை 126 போர் விமானங்களுக்கு ரூ. 79,200 கோடி. ஆனால், இது 1,86,000 கோடியாக அதிகரித்துவிட்டது. அதனால்தான் அந்த ஒப்பந்தம் ரத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதாவது ரூ. 628 கோடிக்கு கொள்முதல் செய்யப்படுவதாக இருந்த ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ. 1,476 கோடியாகி விட்டது. இது முந்தைய ஆட்சியின் நிலவரம்.

மாறாக பாஜக அரசு 36 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்த தொகை ரூ. 58,000 கோடியாகும். அதாவது ஒரு போர் விமானத்தின் விலை ரூ. 1,611 கோடி. இதில் குறிப்பிட வேண்டிய தகவல், இந்த விலை, அதனுடன் இணைக்கப்படும் சில போர்த் தளவாடங்களுக்கும் சேர்த்ததாகும்.

இந்த விலை வித்தியாசம் ஊழல் காரனமாக நேரிட்டதாக காங்கிரஸ் கூக்குரல் எழுப்பியது. சதாகாலமும், போர்த்தளவாடம் வாங்குவதில் லஞ்சம் பெற்றுத் திளைத்துவந்த அக்கட்சிக்கு, ஊழல் என்ற கண்ணோட்டத்தை மீறி சிந்திக்க முடியவில்லை.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் கபில் சிபலும், பாஜக அதிருப்தியாளர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு 2018 டிசம்பர் 14இல் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது. “முந்தைய அரசு செய்த ஒப்பந்தத்தில் காணப்படும் விலையுடன் ஒப்பிடுகையில் இப்போதைய அரசு செய்த அஒப்பந்தத்தில் தவறு ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

ஆனால் உச்ச நீமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக, பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அதை எதிர்த்து பாஜக தலைவர் மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார்.

அதேபோல, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அதை மறுஆய்வு செய்யக் கோரி, ஏற்கனவே வழக்கு தொடுத்தவர்கள் மனுச் செய்தனர். அந்த வழக்குகளிட்ய்ஹான் கடந்த 2019 நவம்பர் 14இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

முதலாவதாக, முந்தைய தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை ஊச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஜ்சன் கோகோய், நீதிபதிகல் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அளித்திருக்கிறது. தவிர, இதுதிஒடர்பாக மத்தியப் பிலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் அறிவித்தது.

அடுத்ததாக, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றம் சொல்லாத ஒன்றை அரசியலுக்காக பொய்யாகக் கூறிஒயதைக் கண்டித்த நீதிமன்றம், அவர் நிபந்தனையற்ர மன்னிப்புக் கோரியதைக் கணக்கில் கொண்டு வழக்கை முடித்துவைத்தது.

அதாவது, ரஃபேல் போர் விமான பேரத்தில் எள்ளளவும் ஊழல் நடைபெறவில்லை என்பதே உச்ச நீதிமன்றத்தின் முடிவு. இதன்மூலம், எதிர்க்கட்சியினரின் புரளிப் பிரசாரம் அநாகரிகமானது என்பதை நாடு மக்கள் உணர்ந்துள்ளனர்.

நாட்டு மக்கள் மோடி ஆட்சி ஊழல் செய்திருக்காது என்ற நம்பிக்கை காரணமாகவே, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நம்பவில்லை. அதனால் தன் 2014ஐ விட அதிக இடங்களில் மோடி தலைமையில் பாஜக வெல்ல வாக்களித்தனர். இப்போது உச்ச நீதிமன்றமும் அதை ருசுப்படுத்தி இருக்கிறது.

இப்போது சில கேள்விகள்:

1 பிரான்ஸ் நாட்டுடனும், டஸ்சால்ட் நிறுவனத்துடனும் ஒரே காலத்தில் செய்யப்பட்ட போர்த்தலவாட ஒப்பந்தம் இது. இதன் அனைத்து விவரக்களையும் பொதுவில் வைக்க முடியாது என்று தெரிந்தும், அதை காங்கிரஸ் வலியுறுத்தியது ஏன்? அப்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரூன், “சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் போர்த் தலவாட வர்த்தக நிறுவனத்தின் நலனுக்காக சில ரகசியங்கள் பேனப்பட வேண்டும்.அது ஒப்பந்தத்தின் முக்கையமான அம்சம்” என்று கூறினார். ஆனாலும், இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அந்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துமாறு நிர்பந்தித்தது ஏன்?

2 போர்த் தளவாட ஓப்பந்தங்களில் சில சலுகைகளை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும். தவிர போர் முக்கியத்துவம் வாய்ந்த இணைப்புகள் வழங்கப்படும். அவற்ருக்கும் சேர்த்தே ஒட்டுமொத்த விலை நிரணயிக்கப்படுகிறது. அதை வெளியில் சொல்வது ஒப்பந்த மீறல் என்று தெரிந்தும், ரகசியமாக ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் பிரசாரம் செய்தது ஏன்? பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணிக்கு இந்த ரகசியக் காப்பு விவரம் தெரியாதா?

3 அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் உடல்நலம் குன்றியதைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் நடத்திய மிகவும் கீழ்த்தரமான பிரசாரத்தை யாரும் மறக்க முடியாது. அவருக்குத் தெரியாமல் பிரதமர் மோடி ரஃபேல் விமானம் வாங்கத் தீர்மானித்ததாதகவும், அதை எதிர்த்ததால் அவர் கோவாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கபில் சிபல் வகையறாக்கள் நாக்கூசாமல் பேசினர். அதை பாரிக்கர் கண்டித்தும், காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் அதை செய்தியாக்கி மகிழ்ந்தன. இதுவாக ஊடக அறம்?

4 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக  ‘தி ஹிண்டு’ பத்திரைகை புதிய சாட்சியங்களை உருவாக்கி பெரும் பிரச்னையைக் கிளப்பியது. டஸ்சால்ட் நிருவனத்துக்கு போட்டியான சர்வதேச நிறுவனங்களின் மூலம் சில ஆவணங்களைப் பெற்று அதன அடிப்டையில் துஷ்பிரசாரத்தை தி ஹிண்டு ஆசிரியர் திரு.ராம் நடத்தினார். இப்போது அவர் என்ன சொல்லப் போகிறார்? அவர் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?

5 அப்போதைய விமானப்படைத் தளபதி அனுப் ராஹா, ரஃபேல் போர் விமான பேரத்தில் தவறில்லை என்று கூறியதற்காக விமானப்படை மீதே சந்தேகங்களைக் கிளப்பினர் சில புல்லுருவிகள். அவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

6 ரஃபேல் விவகாரத்தை மையமாக்கி செய்தி ஊடகங்களில் பெரும் விவாத நிகழ்ச்சிகளை நடத்திய தொலைக்காட்சி சேனல்கள் இப்போது இஞ்சி தின்ற குரங்குகள் போல மௌனம் காப்பது ஏன்?

7 ராகுல் மன்னிப்பு கோரியதால் அவரை நீதிமன்ர அவமதிப்பு வழக்கிலிருந்து நீதிபதிகள் விடுவித்துள்லனர். இத்தான் தவறுக்குத் தண்டனையா? குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் அபராதமாகவேனும் விதித்திருக்க வேண்டாமா? உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை இந்த வழக்கில் கவனத்தில் கொண்டிருக்க வேண்டாமா? இதேபோல சாமானையர் ஒருவர் பேசி இருந்தால் இப்படித்தான் விடுவிக்கப்பட்டிருப்பாரா?

8 ஒரு சர்வதேச போர்த் தளவாட ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வழக்கறிஞர்கள், எனப் பெரும் படையே திட்டமிட்டு துஷ் பிரசாரம் செய்து நடத்திய வழக்கு தோல்வி அடைந்திருக்கிறது. இதில் மோடி அரசு மீதான மக்களின் நல்லெண்னத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. எதில்தான் அரசியல் செய்வது என்று விவஸ்தை இல்லையா?

9 ரஃபேல் ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரம் காரணமாக உலக அளவில் ஏற்பட்ட கருத்துருவால், பிற நாடுகள் ஒப்பந்தம் செய்யத் தயங்கும் நிலை ஏற்படுமே? அதை இந்தக் கயவாளிகளால் திருத்த முடியுமா?

10 ராணுவத்துக்குத் தேவையான நவீன சாதனங்கள் பற்றாக்குறையாக உள்ள சூழலில், பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தத் துடிக்கும் இப்போதைய மத்திய அரசுக்கு சிலர் தடைக்கல்லாக இருக்கின்றனர் என்பது இந்த வழக்குகளில் தெரிய வந்திருக்கிறது. அப்படியானால் அவர்களை யார் பின்னணியில் இருந்து இயக்குகின்றனர்? தரமான போர் விமானம் இல்லாததால் தான் பழைய விமானத்தில் பறந்து எதிரி நாட்டில் விழுந்து சிக்கினார் விமானப்படை வீரர் அபிநந்தன் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்களா?

இந்தக் கேள்விகள் அனைத்து வகையிலும் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட வேண்டும். ஊழல் கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல ராணுவ நவீனமாக்கமும் அவசியம். நல்ல வேளையாக போஃபர்ஸ் பீரங்கியிலும், ராணுவக் கவச உடையிலும் ஊழல் செய்த  காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இல்லை. இறைவனுக்கு நன்றி.

இனிமேலும் சில்லரைத்தனமான விமர்சனங்களில் கவனம் செலுத்தாமல், ஆக்கப்பூர்வமாக இயக்க காங்கிரஸ் கட்சி கற்றுக்கொள்ள வேண்டும். இது மக்களின் ஆசை.