கர்நாடகாவில் உள்ள மைசூர் சாம்ராஜ்யத்தின் படைத்தளபதியாக இருந்த ஹைதர் அலி அந்த சாம்ராஜயத்தையே எதிர்த்து போர்புரிந்து மன்னர் சாம்ராஜ்ய உடையாரின் பலப்பகுதிகளை கைப்பற்றி முஸ்லீம் ராஜ்யத்தை அமைத்தான் அவனது மகனான திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்ததும் தென்னகத்தின் பல்வேறு இடங்களில் நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் கேரளாவில் மலப்புரம் பகுதியில் நடைபெற்ற போரின்போது மாப்பிளாக்கள் என்றழைக்கப்படும் உள்ளூர் முஸ்லிம்களின் துணையுடன் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான் பெண்கள் கற்பழிக்கப்பற்றனர் வாள்முனையில் பல்லாயிரம் பேர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டனர். இந்த கொடூர செயல்களின் நாயகன்தான் கர்நாடகாவின் திப்பு சுல்தான் அவன் தமிழ்நாட்டில் திண்டுக்கல், செஞ்சி , வேலூர் போன்ற பகுதிகளை படையெடுத்து அங்குள்ள அரசர்களை வென்று தனதாக்கினான். நாட்டின் பல்வேறு ஊர்களின் பெயரை முஸ்லீம் மயமாக்கிய மதவெறியன் தான் இந்த திப்புசுல்தான் தனது கடைசி காலத்தில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது நாட்டை காக்க நடந்த போரில் உயிர்துறந்த இந்த நபரை பெரிய தியாகியாகவும் கன்னட மக்கள் கொண்டாட வேண்டும் என்று முந்தய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்து அரசின் சார்பில் இந்த மதவெறியனுக்கு விழா எடுத்து வந்தது இதை எதிர்கட்சியான பாரதிய ஜனதா கடுமையாக எதிர்த்து போராடி வந்தது . குறிப்பாக கர்நாடகாவின் குடகு மாவட்ட மக்கள் போர்கோலம் பூண்டனர் அரசின் போலீஸ் பாதுகாப்புடன்தான் பல இடங்களில் விழாவை கொண்டாடினர்
கர்நாடகாவில் மதவெறியன் திப்புவுக்கு கொண்டாடிவந்த அரசு விழா ரத்து
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாறி தற்போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளது மாநிலத்தில் குறிப்பாக குடகு மாவட்டம் மற்றும் தென் வடகர்நாடகம், கடலோர கர்நாடகம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் இந்த கொண்டாட்டம் நிறுத்தப்படுவதாகவும் கர்நாடக மக்களுக்கு அவனின் ஆட்சி எந்த நன்மையையும் தந்து விடவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது .
மேலும் மொழி ரீதியாகவும் கன்னடத்தை விட உருதுவுக்கும் அரேபிக்குமே அதிக முக்கியத்துவம் அளித்து வந்தான் திப்புசுல்தான் . தனது அரசின் ஓவ்வொரு உத்தரவையும் உருதுவிலே வெளியிட்டான். பல இந்து பெண்களை தனது அந்தரங்க காதலியாக வைத்து கொண்டு கோவிலையே தனது படைவீரர்களின் கோட்டமாக ஆக்கினான் ரங்கநாதர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியிலேயே தனது கடைசி மூச்சையும் விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது .
மேல்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான வேத பண்டிதர்கள் இவனது படையெடுப்பால் தீபாவளி தினத்தன்று படுகொலை செய்ப்பட்டதை தற்போதும் நினைவு கூறும் விதமாக மேல்கோட்டை மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை என்பதை இந்த நேரத்தில் நினைவு கொள்ளவது அவசியமாகிறது.
One thought on “கர்நாடகாவில் மதவெறியன் திப்புவுக்கு கொண்டாடிவந்த அரசு விழா ரத்து”
Comments are closed.
திப்புவின் ஒரிஜினல படத்தை போடுங்க! இந்த படம் ஃபேக்!