கம்யூனிஸ்டுகளின் கூடாரம் காலியாகிறது

புலம்பும் புத்ததேவ்

“திரிணாமுல் காங்கிரஸ் மீது கோபித்துக்கொண்டு பா ஜ க வில் போய் சேருகிறீர்களே ” என்று புலம்புகிறார் மே. வங்கத்தின்  முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

வயதும் 75 ஆகி விட்டது. உடல் நிலையைக் காரணம் காட்டி கட்சியிலும் சீந்துவார் இல்லை. ஏற்கனவே, இவரால் தான் நம்ம ஆட்சி போச்சு என்ற கோபமும் காம்ரேடுகளுக்கு புத்ததேவ் மேல் உண்டு. இந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்னால், ‘நானும் இருக்கிறேன் பார்’ என்னும்படியாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார், இல்லை இல்லை, பொரிந்து தள்ளியிருக்கிறார்.

செங்கொடி ஏந்திய கைகளில் காவிக்கொடியா?

அந்த அம்மா, மமதாவின் காட்டாட்சியின் கொடுமை தாங்க முடியாமல்,  கொல்கத்தா பெரு நகரம் தொடங்கி மாநிலத்தின் குக்கிராமங்கள் வரை பல வருடங்கள் காம்ரேடுகளாக இருந்தவர்கள் கூட்டம் கூட்டமாக பா ஜ க வில் இணைகிறார்கள். நேற்று வரை வர்க்கப் போராட்டத்தைப் பற்றி பேசித் தீர்த்த வாய்கள் இன்று ஹிந்துத்துவ கோஷங்களை ஒலிக்கின்றன. சென்ற சில தேர்தல்களில், குறிப்பாக உள்ளாட்சி தேர்தல்களில் திரிணாமுலுக்கு மாற்று பா ஜ க தான் என்று உறுதியாகிவிட்டது. சி பி எம் மிகவும் பின் தங்கி விட்டது. அதனால் தான் மாவட்ட அளவில்  சி பி எம் கட்சியின் பொறுப்பாளரான ஒரு 57 வயதுக்காரர் ” இப்பொழுதெல்லாம் நம் கட்சி கூட்டங்களுக்கு 15 -20 நபர்கள் தான் வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் அறவே இல்லை. இனிமேல் சி பி எம் முக்கு வாக்களிப்பதெல்லாம் நம் வாக்கை வீணடிக்கும் செயல். ஆகவே  தாமரைக்குத் தான் நான் வாக்கு சேகரிப்பேன் ” என்கிறார்.

இந்த மன நிலை வாக்காளர்- கட்சிக்காரர் என்று பேதமில்லாமல் மாநிலமெங்கும் காணக் கிடைக்கிறது என்று அரசியல் நோக்கர்கள்- நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

காலம் தாண்டிப் போச்சு

புத்ததேவ் அய்யா, இப்பொழுது விசனப் பட்டு என்ன செய்ய, நீங்கள் அன்று விதைத்தீர்கள் இன்று அறுவடை பண்ணுகிறார்கள் உங்கள் தொண்டர்கள்.  அன்று போலீஸ் கையில் இருக்கிறது என்று என்ன ஆட்டம் போட்டீர்கள்,  எங்கள்  ஸ்வயம் சேவகர்களும் பா ஜ க ஊழியர்களும் எவ்விதம் தாக்குதலுக்கு உள்ளானார்களோ அதே கதை இன்று உங்கள் பக்கம் திரும்புகிறது. என்ன ஒன்று, உங்களைப் போன்றவர்களின் நலனுக்கு ஒன்றும் பாதிப்பில்லை;  அனுபவிப்பது எல்லாம் ஏழைத் தொண்டர்கள் தானே!

2 thoughts on “கம்யூனிஸ்டுகளின் கூடாரம் காலியாகிறது

  1. அருமை! இன்றைக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐஜோல் நகரிலிருந்து குவாஹாட்டி நகருக்கு பேருந்தில் பயணம் செய்தேன்! பக்கத்தில் ஓரு வங்காளி அமர்ந்திருந்தார்! நிறைய அரசியல் பேசினோம்! பட்டாச்சார்யா என்ற அவர் சொான்னார் மம்தா வேண்டுமானால் ஆட்சிக்கு வர வாய்ப்பு உண்டு! ஆனால் பாஜக மேற்குவங்கத்தில் வளரவே வாய்ப்பில்லை என்று! ம் என்றேன்! ஆனால் பங்கிம் சந்திரரின் தேசபக்த வங்கத்தில் விவேகானந்த சுவாமியின் வங்கத்தில் தாமரை மலரும் என்று நினைத்துக்கொண்டேன்! சுயம் சேவகர்கள் செயல்வன்மை மற்றும் ஶ்ரீ நமோஜி என்ற தர்மவீரரின் தலமை வங்கத்தை காவி மயமாக்கியிருக்கிறது! ஶ்ரீ அரவிந்தரின் பங்கத்திலே கமலம் நிறைந்திருக்க காண்போம்! ௐ காளி ! ஜெய் காளி!

  2. அய்யா என்று எழுதாதீர்கள் ஐயா! தபிழ் நெடுங்கணக்கில் ஐ, ஒள ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களை குறைக்கும் ஈவெரா வின் முயற்சியை நாம் நிராகரிக்கவேண்டும்!

Comments are closed.