போர்க்கப்பலில் குடும்பத்தோடு உல்லாச பயணம் சென்ற ராஜீவ்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் சுற்றுலா சென்றதாக பிரதமர் மோடி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்றும் அதற்கு அந்தக் கப்பலில்  பணியாற்றிய நானே  சாட்சி எனவும் முன்னாள் கப்பல்படை அதிகாரி பிரஃபுல்லா குமார் பத்ரா தெரி/வித்துள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டின் பெருமையான ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை காங்கிரஸ் குடும்பம் அவர்களது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

அச்சமயத்தில் ஐ.என்.எஸ் விராட் கடல்சார் எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக்கொண்டிருந்தது. ஆனால் சுற்றுலா சென்றிருந்த காந்தி குடும்பத்தை அழைத்து வருவதற்காக அக்கப்பல் அனுப்பப்பட்டது. இதனால் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதா இல்லையா? என்று கேள்வியெழுப்பினார். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. 

ஓய்வுபெற்ற கடற்படை தலைவர் வினோத் பஸ்ரிசா  மற்றும் முன்னாள் கடற்படைத் தலைவர் எல்.ராமதாஸ்  ஆகியோர் பிரதமர் மோடி பொய் சொல்வதாகவும், ராஜிவ் காந்தி தனது மனைவி சோனியாவுடன் அரசு அலுவலாகத் தான் விக்ராந்த் கப்பலில் பயணித்தாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனைடையே ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி பிரஃபுல்லா குமார் பத்ரா, மோடி சொன்னது அத்தனையும் உண்மை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் சுற்றுலா சென்றதாக பிரதமர் மோடி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை என கூறியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்  இதனை  மறுத்து வருவதுடன் மோடி பொய் சொல்கிறார் என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு நானே சாட்சி என தெரிவித்துள்ளார்.