கப்பலில் பிரம்மோஸ் சோதனை

இந்திய கடற்படையை சேர்ந்த டெஸ்டிராயர் வகை கப்பலானல் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நடத்தப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனையின் வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. எனினும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட தேதியை கடற்படை வெளியிடவில்லை. ப்ராஜெக்ட் 15பி’யின் கீழ் கட்டமைக்கப்படும் நான்கு ஸ்டெல்த் வழிகாட்டுதல் ஏவுகணைகள் கொண்ட டெஸ்டிராயர் வகை கப்பல்களில் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் முதன்மையானது. இது கடந்த ஆண்டு நவம்பரில் கப்பற்படையில் சேர்க்கப்பட்டது. அடுத்த கப்பல் 2023ல் இணைக்கப்படும் மற்ற இரண்டையும் 2025ல் படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.