கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதை அடுத்து, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டது. உதகை – மஞ்சூர் சாலையில் 10-க்கும் மேற் பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், இத்தலார், எம ரால்டு சாலையில் மண் சரிவாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் கூறும்போது, ‘தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் நீலகிரி மாவட் டத்தில் பதிவாகும் மொத்த மழை அளவு, கடந்த ஒரு வாரத்தில் பதி வாகிவிட்டது. வரலாறு காணாத அளவாக அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ. மழை பதிவாகியுள் ளது’ என்றார்.
நீலகிரியில் பெய்து வரும் கன மழை காரணமாக, கோவை மாவட் டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை நிரம்பியது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 62,000 கனஅடி நீரும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகி றது. இதன் காரணமாக 4-வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை தொடர்கிறது.