கணித மேதை சகுந்தலா தேவி

இந்தியாவின் புகழ்பெற்ற கணித மேதையும், “மனிதக் கணினி” என அழைக்கப்படுபவருமான சகுந்தலா தேவி, 1929ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி பெங்களூரில் பிறந்தார். அவரின் தந்தை ஒரு சர்க்கஸ்” கம்பெனியில் பணிபுரிந்தார். அவரது மூன்றாவது வயதில் தனது தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்த பொழுதே, அவரின் கணிதத் திறனை புரிந்துகொண்ட அவரின் தந்தை, தனது சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு, சகுந்தலாவின் கணிதத் திறனை தெருக்களில் நிகழ்த்தி காட்டினார். சகுந்தலாவால் எந்த ஆரம்பக் கல்வியும் இல்லாமலே இத்தகைய கணிதத் திறனை வெளிப்படுத்த முடிந்தது.
1944ல், தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா, 1960ன் மத்தியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை மணந்தார். 1980ல், சகுந்தலா பெங்களூருக்குத் திரும்பினார். தனது கணித திறனை நிரூபிக்க 1950ல் ஐரோப்பா மற்றும் 1976ல் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்தார்.
தேவி, ஜோதிடத்திலும் தேர்ந்தவர் ஆவார். சமையல் குறிப்பு, கற்பனை நாவல்கள், புதிர் புத்தகங்கள் பலவற்றை எழுதி உள்ளார். அவருக்கு ஆறு வயது இருந்த போது, மைசூர் பல்கலைக்கழகத்தில் அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார். எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார்.
1980-ஆம் ஆண்டு ஜூன் 18ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில், இரண்டு 13 இலக்க எண்களை வெறும் 28 வினாடிகளில் மனதிலேயே கணக்கிட்டுப் பெருக்கிச் சாதனை படைத்தார் 1977-ல், 201 இலக்க எண்ணின் 23-வது மூலத்தை கணினியை விட வேகமாகச் சில வினாடிகளில் சரியாகக் கணக்கிட்டார். எந்தவிதமான உயர்கல்விப் பட்டங்களும் இல்லாமல், தனது அரிய கணிதத் திறனை வெளிப்படுத்தினார்.
1977ல், அவர் 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை கணக்கிட்டார். இதை யூனிவாக்-1108 என்ற கணினியைவிட, 12 வினாடிகள் விரைவாக செய்து முடித்தார். இவரின் மறைவிற்குப் பிறகு 2020-ஆம் ஆண்டில், அதிவேக மனித கணக்கீட்டாளர் என கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. 2013ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி சகுந்தலாதேவி சுவாச பிரச்சனை காரணமாக பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2013 ஏப்ரல் 21ல் மருத்துவமனையில், தனது 83வது வயதில் காலமானார். தேவிக்கு அனுபமா பானர்ஜி என்ற மகள் உள்ளார்.