தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர் 16ல் துவங்கியது. இதற்காக நவம்பர், டிசம்பரில் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. வரும் ஜனவரி 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும், ‘VOTER HELP LINE’ எனும் ‘மொபைல் செயலி’ வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.