ஒரு மணி நேரமும் ஒரு மணி நேரமும் ஒன்றா?

உங்கள் அலுவலகத்தில் காலை நேரத்தில் மிகச்சரியாக பத்து மணிக்கு உங்கள் வேலையை செய்யத் தொடங்கி 11 மணிக்கு முடித்து விடுகிறீர்கள். பிறகு 11 மணிக்கு ஓய்வெடுக்கத் தொடங்கி சரியாக 12 மணி வரை ஓய்வெடுக்கிறீர்கள். நீங்கள் வேலை செய்த கால அளவும் ஓய்வெடுத்த கால அளவும் சமமானதா?

இதிலென்ன சந்தேகம் சமமானதுதான். இரண்டு ஒரு மணி நேரம் தான்” என்பது தான் பலபேருடைய பதிலாக இருக்கும். ஆனாலும் உண்மையில் அப்படி இல்லை. மேலே சொன்ன இரண்டு வகையான ஒரு மணி நேரங்களும் சமமானவை அல்ல. நீங்கள் உலக மகா கடிகாரத்தை வைத்துக் கூட சத்தியம் செய்யலாம். என்ன செய்தாலும் சரி, இரண்டு ஒரு மணி நேரங்களும் இயற்கை இயற்பியல் படி சரியில்லை. சமமில்லை. எப்படி?

நாம் பயன்படுத்தும் கடிகாரங்கள் எல்லாம் கோள்களின் சுழற்சியை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதன் அடிப்படையில் ஒரு நாளும், சூரியனைச் சுற்றி வருவதன் அடிப்படையில் வருடங்களும் கணக்கிடப்படுகின்றன.

இந்த சுழற்சி எப்போதும் ஒரே சீராக இருக்கின்றது என்று நாம் கருதுகிறோம். அந்த உறுதியின் அடிப்படையில் தான் நாள், மணி, நேரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தக் கோள்கள் எப்போதும் ஒரே சீராக சுழல்வதில்லை என்பதும் ரொம்பவே ஆச்சரியமான உண்மை.

உதாரணமாக பூமி எப்போதும் 24 மணி நேரத்தில் தன்னைத்தானே சுழன்று முடித்து விடுவதில்லை. அதுபோல சூரியனையும் மிகச்சரியாக முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாட்களில் சுற்றிவந்து விடுவதில்லை.

இந்த சுழற்சி இயக்கங்களில் நுட்பமான நேர வேறுபாடுகள் இருக்கின்றன.

வானவெளியில் சுழலும், பல்வேறு கோள்களின் சுழற்சி இயக்கம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. சந்திரனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் வியாழனின் முதல் இரண்டு துணைக் கோள் பற்றிய ஆய்வு முடிவுக்கும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் பன்னிரெண்டு வருடத்தில் மெதுவாக சுற்றியதையும் அடுத்த பன்னிரெண்டு வருடத்தில் வேகமாக சுற்றியதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வான் பொருட்களின் இதுபோன்ற சுழற்சி மாறுபாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முக்கியமாக பூமியின் சுழற்சி நேர மாட்சிக்கு சந்திரனின் ஈர்ப்பு விசையில் ஏற்படும் ஓதங்களை ஒரு காரணமாகச் சொல்லலாம். மட்டுமல்லாமல் பூமியின் மையப்பகுதி விரிவடைந்து வருவதும் காரணம்.

இப்படி பூமியின் இயக்க மாறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல், சீராக இயங்குவதாக நினைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் எப்படி சரியான நேரங்களைக் காட்டும்?

சில சமயம் ஒரு மணி நேரம் என்பது சீக்கிரம் முடிந்து விடுகிறது. சில சமயங்களில் அதே ஒரு மணி நேரம் முடிய நீண்ட நேரம் ஆகிறது. நீங்கள் ஓய்வெடுத்த நேரம் கூட நீண்ட நேரமாக இருக்கலாம்…

நேரம் சரியில்லாமல் இருக்கலாம்…?

ஆனால் நேர நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும். இல்லையா…?