ஒரு கிராமத்தில் இருந்து 2300 பேர் திருப்பதிக்கு புனித பயணம்

கிருஷ்ணகிரி அடுத்த, அகச்சிப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட, கிட்டம்பட்டி கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர், பல ஆண்டுகளாக, ஒவ்வொரு வீட்டிலும், வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், சுவாமியை வழிபட்டு, உண்டியலில் பணம் சேமிப்பர்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பணம் சேர்த்து வைத்த உண்டியலுடன், அனைவரும் ஒன்றாக சேர்ந்து, திருப்பதிக்கு செல்வது வழக்கம்.இதன்படி நேற்று, கிட்டம்பட்டி மக்கள், 2,300 பேர், 40 பஸ்கள், 30 கார்களில், உண்டியலுடன் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருப்பதிக்கு நடந்தும், மாட்டு வண்டிகளிலும், தற்போது பஸ்களில் சென்று வருகிறோம்.கீழ் திருப்பதியில் உள்ள ஆழ்வார் குளத்தில் குளித்த பின், அங்கேயே உண்டியலை பிரித்து, மூன்றாக பங்கிடுவோம். ஒரு பங்கை, திருப்பதி கோவில் உண்டியலில் போடுவோம்; மீதமுள்ள, இரு பங்கை, எங்கள் செலவுக்கு வைத்து கொள்வோம்.அதன்பின், வசதிக்கேற்றபடி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோம். கிட்டம்பட்டியில் உள்ள, 90 சதவீதம் பேர், இவ்வாறு செல்கிறனர்.