ஒடிடி தளங்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு.

சமீப காலமாக ஆன்லைனில் படம் மற்றும் வெப் சீரியல் அதிகமாக வெளியிடப்பட்டு வருகிறது. அதுவும் இந்த கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக ஆன்லைனின் வெளியிடப்படும் படங்கள் அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கென தவறான கருத்துகளை முடக்கவும் கண்டிக்கவும் சென்சார் போர்ட் இல்லை. எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி தவறான கருத்துகளை சமுதாயத்தில் இதனால் பரப்ப முடியும்.

அதனை தவிர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டியது. அதன் விளைவாக தற்போது ஓடிடி தளமாக உள்ள அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்களை ஓடிடி தளங்களையும் ஆன்லைன் செய்தி தளங்களையும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு. மேலும் ஆன்லைன் ஒளிபரப்பும் விரைவில் சென்சார் செய்யப் படலாம். இதனால் தவறான தகவல் ஒளிப்பரப்புவது தவிர்க்கப்படலாம்.