ஐ.எஸ்.ஐ.எஸ். கொடுங்கரங்கள் இலங்கையிலும் மாலத்தீவிலும்!

 

இலங்கை கண்டியில் மார்ச் 6 அன்று முஸ்லிம்கள் ஒரு புத்தமத நபர் ஒருவரை கடத்திக் கொன்றதாக செய்தி. இதையடுத்து ஏற்பட்ட கலவரம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.  இலங்கையை போலவே மாலத்தீவிலும் அரசியல் நெருக்கடி.  உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக விலும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்பிரச்சினையில் சீனா குளிர்காய காய்களை நகர்த்துகிறது.  ஒருபுறம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, மறுபுறம் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.  வெளியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு, பாகிஸ்தான் மூலம் தூண்டிவிடும் காரியத்தை  சீனா செய்து வருகிறது.  ஆகவே சிரியாவில் தலை தூக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். இன்று பல்வேறு நாடுகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது.

மாலத்தீவிலும் இலங்கையிலும் நடந்த கலவரத்திற்கு சில மதசார்பற்ற கட்சிகள் இந்தியாவின் மீது குற்றம் சுமத்து வாடிக்கையாகிவிட்டது.  இந்தியாவிலிருந்து சிரியாவிற்கு செல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கை, மாலத் தீவு வழியாக சிரியாவிற்குள் நுழைகிறார்கள்.  இலங்கையும் மாலத்தீவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சொர்க்கமாக திகழ்கிறது.  இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியின் காரணமாக, இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிரிசேனா கடுமையான நடவடிக்கை எடுக்க முன் வந்ததால்,  கலவரம் வெடித்துள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு 10 நாள்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  கலவரத்திற்கு  முக்கியமான காரணம் என்ன? முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் வியாபாரம் செய்யும் சிங்களவர்கள் ஹலால் முறைப்படி வியாபாரம் செய்ய வேண்டும், குறிப்பாக புலால் விற்பனை என்பது தூவா ஓதித்தான் விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட கலவரம்.  இந்த கலவரத்திற்கு பின்னாலிருந்து இயக்குபவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். காரர்கள்.

2009-ல் விடுதலை புலிகளின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தியதன் காரணமாக, அதிக அளவில் பல ஆண்டுகளாக சலுகைகளை பெற்று வாழ்ந்த முஸ்லிம்கள்,  மற்ற நாடுகளில் கடைபிடிக்கும் யுக்திகளை இலங்கையிலும் கடைபிடிக்கத் துவங்கினார்கள். இலங்கை அரசின் சட்டத்திற்கு மாறாக, முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் தங்களின் குடும்ப விவகாரங்கள், திருமண சச்சரவு போன்றவைகளை நீதிமன்றத்தின் மூலம்  அல்லாமல், உள்ளுர் இமாம் மூலமாக, இஸ்லாத்தின் ஷரியத் மூலமாகவே தீர்ப்பார்கள். என்றெல்லாம் நிபந்தனை விதித்தார்கள். கண்டியில் ஏற்பட்ட கலவரத்திற்கு இதுதான் முக்கியமான காரணம். பொத்து பல சேனா (ஆணிஞீத ஆச்டூச் குஞுணச்) என்ற அமைப்பு நிபந்தனைகளை கடுமையாக எதிர்த்தது.  சிங்களவர்களை தூண்டிய அமைப்பும் இந்த புத்தலால அமைப்பினர்.

மாலத் தீவு –  இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு மாலத் தீவு.  பிப்ரவரி 1ந்தேதி மாலத் தீவின் உச்ச நீதிமன்றம் முன்னாள் அதிபர் நஷித் உள்ளிட்ட அரசியல்  தலைவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.  மேலும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கத்தையும் ரத்து செய்து,  உச்ச நீதிமன்ற உத்தரவை ஆளும் அதிபர் அப்துல்லா யமீன் ஏற்றுக் கொள்ளாமல் அவசரநிலையை அறிவித்துள்ளார்.  முன்னாள் அதிபரான நஷீத் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.  ஆனால்  இந்தியா உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.  மாலத்தீவிற்கு விஜயம் செய்யவிருந்த பாரத பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தையும் ரத்துசெய்து விட்டார்.   இந்த சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். யின் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.  சீனாவின் தலையீடும் இப்பிரச்சினையில் ஊடுருவியுள்ளது.

மாலத்தீவை போலவே, இலங்கையில் ராஜபட்சே ஆட்சியிலிருந்த வரை சீனாவின் செல்வாக்கு கொடிகட்டி பறந்தது.  சிறீசேனா ஆட்சிக்கு வந்தவுடன் நிலை மாறியதால், சீனாவின் தூண்டுதலால், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் இலங்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தனது பயங்கரவாத  செயலை, கலவரத்தின் மூலம் செயல்படுத்த முனைந்தது.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகையே நான்கு லட்சம். இதில் 200க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இருப்பதாக கூறப்படுகிறது.  ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் முதன்மையான நோக்கம் ஐரோப்பியர்கள் மீது வெறுப்பும் அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதும்தான்.  மாலத்தீவு என்பது சொர்க்க பூமி.  ஐரோப்பியர்கள் தங்களது விடுமுறையை கழிப்பதற்கு வரும் ஒரு இடம்.  எனவே ஐரோப்பியர்களை பழிவாங்க மாலத் தீவை பயன்படுத்த திட்டமிட்டதாகவும், இத் திட்டத்திற்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், சீனாவும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில்  கேரளத்தில் அதிக அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள்.  மாலத்தீவிற்கும் இலங்கைக்கும் அருகில் உள்ள இந்திய பகுதி கேரளா.  மாலத்தீவில் வசிப்பவர்கள் கேரளத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.  அரபு நாடுகளில் பணியாற்றும் கேரள முஸ்லிம்கள் தங்களின் சட்ட விரோத பணத்தை முதலீடு செய்திருக்கும் நாடு மாலத்தீவு.  பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியானது சவூதி அரேபியாவிலிருந்து மாலத் தீவு வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.  எனவே இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மாலத் தீவில் உள்ள ஐ.எஸ்ஸால் ஆபத்து.

 

 

உலகம் போகிற திசை

* மியான்மர் அரசு, (பங்களா தேஷை சேர்ந்த) ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றிய பிறகு வெகு வேகமாக அந்த ஊர்களில் ராணுவப் பாசறைகளை அமைத்து வருகிறது.

* அமெரிக்க அரசு பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மைக் பாம்பியோவை வெளியுறவு அமைச்சராக்கியுள்ளது.