எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பாரத ரத்னா விருது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

 

” இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவரது பார்லி., பணிகள் என்றும் பாராட்டுதலுக்குரியது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. தகவல் துறை மற்றும் உள்துறை என சிறந்த பணியாற்றிய அத்வானி அனைவராலும் மதிக்கப்படும் நபர் ஆவார். ” இவ்வாறு அவர் கூறியுள்ளார். விருது தொடர்பாக பிரதமர் மோடி, அத்வானியை போனில் தொடர்பு கொண்டு மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.