எம்.எல்.வசந்தகுமாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி ஆவார். பாரத மொழிகளில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். இவர் “ராகங்களின் அரசி” என்று அழைக்கப்படுகிறார்.மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம்.எல்.வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும், லலிதாங்கிக்கும் 1928ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி.என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்தார்.
அவரது தாய், தந்தை இருவரும் இசைக்கலைஞர்கள். வசந்தகுமாரி சென்னையில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் பயின்றார். அவர் ஆரம்பத்தில் மருத்துவம் பயின்று மருத்துவராக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் கர்நாடக இசைக்கலைஞர் ஜி.என். பாலசுப்பிரமணியம் குருவினால், அவரது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் இசைத் துறையில் இருந்தாலும், தனது மகளை இசைகலைஞராக ஆக்குவதில் ஆர்வம் காட்டவில்ைல. மாறாக அவருக்கு பொதுக்கல்வியை வழங்கினர். வீட்டில் நிலவிய இசைச் சூழல் அவருக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சி செய்யப் போதுமான வாய்ப்பை அளித்தது. ஒருநாள் அவர் பாடுவதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் கேட்டவுடன், எம்.எல். வசந்தகுமாரியை இசை பயிற்றுவிக்க பெற்றோரை சம்மதிக்க வைத்தார்.
எம்.எல். வசந்த குமாரி 1940ம் ஆண்டு அவரது 12 வயதில், தனது தாயார் லலிதாங்கியுடன் ஒரு இசை நிகழ்ச்சியில் அறிமுகமானார். 1942ல், பெங்களூரில் தனது முதல் தனி நிகழ்ச்சியை வழங்கினார். வசந்தகுமாரியின் தாயார் லலிதாங்கி புரந்தரதாசர் கிருதிகளின் தொகுப்பை நிகழ்த்தினார். அவற்றில் பலவற்றை தனது மகளுக்கும் கற்றுக் கொடுத்தார். நாராயண தீர்த்தரின் கல்யாண கோபாலம் மற்றும் புரந்தரதாசரின் வெங்கடாசல நிலையத்தை சிந்துபைரவி ராகத்தில் பிரபலப்படுத்த வசந்தகுமாரி உதவினார். ஹிந்துஸ்தானி மேஸ்ட்ரோ படே குலாம் அலி கான் அவரது இசையைப் பாராட்டினார். 1946ல், வசந்தகுமாரி ஒரு பின்னணிப் பாடகியாகவும் ஆனார். அவரது முதல் படைப்பு 1951ம் ஆண்டு வெளியான `மணமகள்’ திரைப்படத்தில் இருந்தது. அதில் அவர் ராகமாலிகாவில் எல்லாம் இன்பமயம் மற்றும் `பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா` என்ற பாடலைப் பாடினார். 1951ம் ஆண்டு, `ஓர் இரவு’ திரைப்படத்தில் அய்யா சாமி பாடலையும், 1952ம் ஆண்டு, `தாய் உள்ளம்’ திரைப்படத்தில், `கொஞ்சும் புறவே’ பாடலை பாடினார். பாடல்கள் ஒவ்வொன்றும் கல்யாணி ராகத்தை உள்ளடக்கி நல்ல வரவேற்பைப் பெற்றன.
வசந்தகுமாரி தசாவதாரப் பாடல்களைப் பாடினார். 1970 வரை திரைப்படங்களில் தொடர்ந்து பாடினார். மிருதங்க கலைஞர் பாலக்காடு மணி ஐயர், தனது வைராக்கியத்தை தளர்த்திக் கொண்டு வசந்தகுமாரியுடன் கச்சேரிகளுக்கு சென்றார். வசந்தகுமாரி கலைமாமணி விகடம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தியை 1951ல் திருமணம் செய்தார். அவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி சங்கரராமன் என்ற மகனும், தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிரபலமான ஸ்ரீவித்யா என்ற மகளும் இருந்தனர். சரஸ்வதி சீனிவாசன் வசந்தகுமாரியின் முதல் சீடர் ஆவார். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்றனர். 1990ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி தனது 62-வது வயதில் புற்றுநோயால் காலமானார்.