எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழக பட்ஜெட் தாக்கலின் போது பேச அனுமதிக்க அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினர். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடந்த சட்டசபை தேர்தலின்போது 505க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி தி.மு.க ஆட்சிக்கு வந்தது. முதல் கையெழுத்து ‘நீட் தேர்வு ரத்து’ என்றனர். ஆனால், 100 நாட்கள் ஆகியும் எந்த தீர்வும் இல்லை. இதனால், மாணவர்களிடம் குழப்பத்தை இந்த ‘விடியா அரசு’ ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறி வெற்று அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் உள்ளாட்சி தேர்தலையொட்டியும் அ.தி.மு.கவினர் மீது தி.மு.க அரசு பொய் வழக்கு போடுகிறது. பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஆகஸ்ட் 9ம் தேதி ‘நமது அம்மா’ பத்திரிகை அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை செய்துள்ளனர்’ என கூறினார்.