எச். ராஜா கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ‘சேலத்தில் முதல்வர் ஸ்டாலினை பார்க்க அரசு மக்களை திரட்டலாம். அங்கு கொரோனா வராது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி சிதம்பரத்தில் தேரோட்டத்திற்கு தடை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, சிதம்பரம் என்று அனைத்து இடங்களிலும் ஹிந்துக்களுக்கு வழிபாட்டுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் பணிமயமாதா தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசுக்கு சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.