உருது நீக்கம்

லடாக் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ர உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்க்யால், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பணிகளுக்கு உருது மொழியை கட்டாயம் என்ற பழைய அரசு சட்டத்தை நீக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, லடாக் நிர்வாகம் தற்போது அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கு உருது மொழி கட்டாயம் என்ற சட்டத்தை நீக்கியது. ஜம்யாங் செரிங் நம்க்யால், இதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு லடாக்கில் நடைபெற்ற முக்கிய மாற்றங்களில் ஒன்று. லடாக் மக்களுக்கு உருது அந்நியமான மொழி. லடாக்கில் உள்ள மக்கள் உருது பேசுவதில்லை. இங்குள்ள முஸ்லீம்கள் கூட உருது பேசுவதில்லை. ஆனால், இது காஷ்மீர் ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது’ என கூறினார். வழக்கம்போல, காங்கிரஸ் இதற்கு தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.