ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, 79வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, ‘உயர் சக்தி மக்கள் தொகை ஆய்வுத் திட்டத்தை’ தொடங்குவதாக அறிவித்தார். இந்த தருணத்தில், இதை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் கூறினார். பாரதிய இளைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராகவும், சகோதரிகள், மகள்களை குறி வைத்து, நிலத்தை அபகரிக்க பழங்குடி சமூகங்களை தவறாக வழிநடத்துவதாகவும் எச்சரித்தார். நாடு முழுவதும், குறிப்பாக எல்லை மாநிலங்களில் பரவியுள்ள சட்டவிரோத வங்காளதேச, ரோஹிங்கியா குடியேறிகளை அம்மாநில அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்தி வரும் நேரத்தில், மக்கள் தொகை மாற்றம் குறித்த பிரதமர் மோடியிடமிருந்து வலுவான கருத்துக்கள் வந்துள்ளன.
1980-ல் தமிழகத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் பெருவாரியான ஹிந்துக்கள் மதமாற்றம் நடந்தது. அந்நிகழ்ச்சியில், அன்றைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் பாளாசாஹேப் தேவரஸ் ‘’எந்த மாநிலத்திலும் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறையுமானால், அது தேசத்திற்கு ஆபத்தாக முடியும்’’ என கூறியதை, தற்போது நினைத்து பார்க்க வேண்டும்.
1998-ல் முன்னாள் ராணுவ தளபதியும், அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா, குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பூர்வீக அஸ்ஸாமியர்கள் தங்களின் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையினராக மாறும் அபாயம் உள்ளது. இது திரிபுரா, சிக்கிமில் ஏற்கெனவே நடந்தது போல நிகழலாம் என்று எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை புறக்
கணித்ததால் ஏற்பட்ட விளைவின் காரணமாக, பிரதமர் மோடி இவ்வாறு அறிவித்துள்ளார்.
ரோஹிங்கியர்கள் பெரும்பாலும் முறையான ஆவணங்கள் இல்லாமல் பாரத நாட்டுக்குள் நுழைகின்றனர். இதனால், அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாமல் போகிறது. இது தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
தீவிரவாதத் தொடர்பு: உளவுத்துறையின் அறிக்கைகளின்படி, ரோஹிங்கியா அகதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இஸ்லாமிய அரசு மற்றும் பிற தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய செயல்களால் பாரதத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
சந்தேகம் மற்றும் கண்காணிப்பு: ரோஹிங்கியா மக்கள் பெரும்பாலும் பாரதத்தில் உள்ள இஸ்லாமிய குழுக்களின் உதவியுடன் ஊடுருவி வருகின்றனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கு அவர்களை கண்காணிப்பதில், சிக்கல்களை உருவாக்குகிறது.
ஏற்கனவே, அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லைப்புற மாநிலங்களில் லட்சக்கணக்கான பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியாக்கள் ஊடுருவி
யுள்ளார்கள். சில ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், அதை செயல்படுத்த முந்தைய அரசாங்கம் முன்வரவில்லை. இது நாட்டின் குடிமக்கள் தரவை பாதிப்பதுடன், பாதுகாப்பையும், ஜனநாயகமும் கேள்விக்குள்ளாக்குகிறது.