இவர் வேற மாதிரி

ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான ‘ஸோஹோ கார்ப்பரேஷனின்’ தலைமை நிர்வாக அதிகாரி. ஆண்டுக்கு 3300 கோடி லாபம் ஈட்டுகிறது இவர் நிறுவனம்.

அமெரிக்கா, சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்த அதன் தலைமையகத்தை, தற்போது தென்காசிக்கு அருகில் உள்ள ‘மத்தளம்பாறை’ கிராமத்துக்குக் மாற்றிவிட்டார்.

மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்ரீதர் வேம்பு, உடுத்துவது சாதாரண வேட்டி சட்டை. ஊருக்குள் பயணிப்பது சைக்கிளில். சாப்பிடுவதும், டீ அருந்துவது, கிரிக்கெட் விளையாடுவது எல்லாம் கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுடன்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி படிப்பை தொடரமுடியாத கிராமத்தில் உள்ள நான்கு ஏழைக் குழந்தைகளுக்கு தன் ஓய்வு நேரத்தில் டியூஷன் எடுக்க ஆரம்பித்தார். அது தற்போது அது 52 மாணவர்கள் 4 ஆசிரியர்களுடன் வளர்ந்துவிட்டது. கிராமத்து மாணவர்களுக்கு  கணினிப் பயிற்சி கொடுக்க முயற்சி நடக்கிறது.

பாரதத்தின் கிராமங்களில் உள்ள 8000 இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி, வேலை வாய்ப்பு, 10,11,12வது படித்து பாதியில் படிப்பை விட்டவர்களுக்கு கணினி படிப்பு என செயலாற்றுகிறது இவரது நிறுவனம்.

அலுவலகத்தை கிராமங்களில் அமைக்க வேண்டும் என விரும்பும் இவர் இன்னும் சில மாதங்களில் 10 கிராமங்களில் அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளார்.

பணம் இருந்தும் எளிமையாக வாழும் இவரை போன்ற உதவும் குணம் கொண்டவர்களால் பாரதம் உலக அரங்கில் வேகமாக முன்னேறும் என எதிர்பார்க்கலாம்.