சோவியத் ரஷ்யாவை மட்டுமே தங்கள் தந்தை நாடாக கருதுபவர்கள் பாரதத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள். இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஜெர்மனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள், இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள். ஆனால் ஜெர்மனி சோவியத் ரஷ்யாவில் உள்ளே நுழைந்ததுமே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். அவர்கள் காந்தியையும், நேதாஜியையும் ‘குருட்டு மேய்ப்பர்கள்’ என தூற்றினர். தேசவிடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தர விழைந்த நேதாஜியின், இந்திய தேசிய விடுதலைப் படையினரை, கற்பழிப்பவர்கள் என்றனர். நேதாஜி, ரங்கூனில் ஆடம்பர பங்களாவில் வசிப்பவர், பர்மாவை கொள்ளையடிக்க வந்தார். தென்னகப்பகுதிகளில் அவரது ஏஜெண்டுகள் உள்ளனர் என தரம் தாழ்ந்து எழுதியும், பேசியும், கேவலமான கார்ட்டூன் வரைந்தும் நேதாஜியையும் காந்தியையும் அவமதித்தவர்கள்தான் இந்த கம்யூனிஸ்ட்டுகள்.