விவசாய போராட்ட நாடகங்கள்

விவசாய ஏஜெண்டுகள், விவசாயிகள் எனும் பெயரில் டெல்லியில் செய்யும் போராட்டங்களால் தங்கள் பெயர் கெடுவதாக உண்மை விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். சமீபத்தில், போராட்டக்காரர்கள் சிங்கூரு பகுதியில் முகமூடி அணிந்த ஒரு மனிதனை பிடித்தனர். அந்த நபர், விவசாய போராட்ட தலைவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கில், காவல்துறையால் அனுப்பப்பட்டவர் என கூறினர். ஊடகங்களும் இதை பெரிதுபடுத்தின. ஆனால் அந்த மனிதன் பேசும்போது, இதை குறித்து அவனுக்கு எந்த விவரமும் சரியாக தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள் அவனுக்கு விஷயங்களை எடுத்துக்கூறி பேச வைத்தனர் என்பது வீடியோவில் நன்றாக தெரிகிறது. அவன் பெயர் யோகேஷ் என்பதும், போராட்டக்குழு தலைவர்கள் தன்னை மிரட்டி பொய் சொல்ல வைத்தார்கள் எனவும் அவன் காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டான்.
மற்றொரு நிகழ்வில், விவசாய போராட்டத்தில் நான் செல்வதை தடுக்க காவல்துறையினர் என் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தநர் என ருல்டா சிங் கூறியிருந்தார். ஆனால், அவரே ஒரு ஹாக்கி மட்டைக் கொண்டு தன் காரின் கண்னாடியை உடைத்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது அங்கு ஒரு காவலரும் இல்லை என்பதும் இதில் தெரியவந்துள்ளது. எனவே, இவர்கள் அனுதாபம், ஆதரவு தேடியும் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்குடனும், இவர்கள் திட்டமிட்டே நடத்தும் நாடகங்கள் இவை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மை விவசாயிகள் இல்லை என்பது தெரிந்திருந்தும், அதில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியிருப்பது ஒரு தவறான முன்னுதாரனமாகிவிடும் என சமூக, விவசாய ஆர்வலர்கள் கருதுகின்றனர்.