இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது

ராமாயணத்தை டிவியில போட்டால் இவனுங்க சம்புகன் என்ற ‘தலித்’ தின் தலையை ராமன் கொய்த கதையைக் கூறி ‘பார்ப்பனீய’ மேலாதிக்கத்தை வெளிக் கொண்டு வருவார்களாம்!

ராமன் என்னிக்குடா ‘பார்ப்பான்’ ஆனான்? அவன் மன்னர் குல வம்சம் – க்ஷத்ரியன்!

அதுவும் ‘சம்புகன் வதம்’ வால்மீகி எழுதிய ராமாயணத்தில் கூறப்படவில்லை என்கிறார்கள்! அப்படியே வால்மீகி எழுதி இருந்தாலும் வால்மீகியும் ‘பார்ப்பான்’ இல்லை – வேடுவர் குலம்!

அதேபோல் துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குருதட்சணையாகக் கேட்டு அரிந்து வாங்கிக் கொண்டது பார்ப்பனீயக் குறியீடாம்!

துரோணர் ‘பிராமணர்’ – ஏகலைவன் கீழ் சாதி – எனவே ‘பார்ப்பான்’ ஆகிய துரோணர் கீழ் சாதிக்காரன் வில்வித்தை கற்பது பொறுக்காமல் அவனுடைய கட்டை விரலை வெட்டி வாங்கிட்டாராம்!

உன் லைனுக்கே ஒரே ஒரு கணம் நானும் வாரேன்!

துரோணர் பிராமணர் . ஏகலைவன் மலைவாழ் மக்கள் இனம்

ஒருநாள் பாண்டவ – கௌரவர்கள் காட்டில் வேட்டையாடப் போனபோது நாய் ஒன்று இவர்களைப் பார்த்துக் குரைத்து விரட்டியது!

அப்போது எங்கிருந்தோ ஒரே நேரத்தில் 5 அம்புகளை விட்டு அந்த நாயின் வாயைத் தைத்தான் ஒரு வேட்டுவ குல இளைஞன்.

அவன் யார் என்று அர்ச்சுனன் விசாரிக்கிறான் – அவனுடைய குரு யார் என்றும் கேட்கிறான்!

அந்த இளைஞன் தன் பெயர் ‘ஏகலைவன்’ என்றும் தனது குருநாதர் துரோணர் என்றதும் அரஜுனனுக்குக் கோபமும் பொறாமையும் உச்சகட்டத்தை அடைகிறது!

துரோணர் தனது மகன் அஸ்வத்தாமாவுடன் வறுமையில் அலைந்து, பாண்டவ – துரியோதனாதிகளுக்கு குருவாக அரண்மனை வாசம் பெற்றவர்!

தங்களால் அடைக்கலம் தரப்பட்ட ஒரு ஏழைப் பார்ப்பான், தங்களுக்கே அறியாமல் வேறு எவனோ ஒரு காட்டுவாசிக்கு – இப்படி ஒரு அற்புதமான வில் வித்தையை போதிப்பதா? – என்ற ஆத்திரம் மேலிடுகிறது அர்ச்சுனனுக்கு!

நேராக துரோணரை அணுகி அவரிடம் விசாரிக்கிறான் அர்ஜூனன்!

“ஐயகோ! நானா அரண்மனையில் வசித்துக் கொண்டு, ராஜகுமாரர்களுக்கே எப்படி துரோகம் செய்வேன்?”- என்று வருந்துகிறார் துரோணர்!

“எனக்கு இணையாக, என்னைவிட மேலாக இன்னொரு வில்லாளி இருப்பதா? நீர் சொல்வது உண்மையானால் இப்போதே போய் அவனுடைய கட்டைவிரலை அரிந்து வாரும்!”- என்கிறான் அர்ஜுனன்!

துரோணர் காட்டை அடைகிறார் – அவன் தன் போன்ற உருவில் ஒரு ‘பதுமை’ யை முன்வைத்து வித்தை கற்றதை அறிகிறார் – குருதட்சணையாக அவனது கட்டைவிரலைக் கேட்டு வாங்குகிறார்!

இதிகாசக் கதையை இதிகாசமா பாக்கணுமடா!

அதற்கெல்லாம் இந்தக் கால அளவு கோல்களை வைத்து ‘சாதிச் சாயம்’ பூசக் கூடாது!

 

முரளி சீதாராமன்

One thought on “இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது

  1. You have left out the first part of Ekalavya’s story. Dhronacharya refused to teach Ekalavya when he was approached by Ekalavya, because he was a hunter and not a Kshatriya. Why don’t we acknowledge the Varna dharma that existed at that time?

Comments are closed.