இவரும் ஒரு சபரிதான்

ஆந்திரா, விஜயநகரத்தில் வாழும், தினக்கூலி தொழிலாளியான ஒரு ஏழை பெண், அன்னபூரணி அம்மாள். அவரது கணவரும் பல மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். கொரோனா காரணமாக ஒரு மகன் சமீபத்தில் இறந்துவிட்டார். தற்போது அன்னபூரணியம்மாள், தன் மற்றொரு மகனுடன் மிகச் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அந்த மகனுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வேலை இல்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையே அவர் வாழ்ந்தாலும் அவருடைய இதயம் மிகவும் விசாலமானது. அவர் செல்வத்தின் அடிப்படையில் ஏழையாக இருக்கலாம். ஆனால் தொண்டின் அடிப்படையில் அவர் மிகவும் பெரியவர். அன்னபூரணியம்மாள் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேமித்த தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை அயோத்தியில் அமையவுள்ள ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்காக உடுப்பி பெஜாவர் மடத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் மூலமாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையிடம் அவர் தன் பங்காக கொடுத்து, நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.