ஒரு வழியாக நிவார் புயலில் இருந்து பெரும் பாதிபின்றி தப்பியது தமிழகம். அரசின் முன்னேற்பாடுகள் பாராட்டத்தக்கது. சீரமைப்பு நடவடிக்கைகளும் மோசம் என சொல்வதற்கில்லை. ஆனால் 1959–ல் சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது முதல் இன்றுவரை மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன திராவிட கட்சிகள். ஆனால் இன்றுவரை தலைநகரான சென்னையையே மழை வெள்ள பாதிப்பில் இருந்து காக்காமல் மக்களை தவிக்க விடுகின்றனர். சென்னையே இப்படி என்றால் மற்ற மாவட்டங்களின் நிலை? இதே திராவிட ஆட்சிகளில்தான் ஏரி, குளங்கள், நீர் வழித்தடங்கள் போன்றவை அரசால் சட்டபூர்வமாகவும், அரசியல்வாதிகளால் சட்டத்திற்கு புறம்பாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விளைவு, 10 மாதங்கள் தண்ணீருக்கு பிரச்சனை, 2 மாதங்கள் தண்ணீரால் பிரச்சனை என தத்தளிக்கிறது தமிழகம். சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட்டிருகின்றன. ஆனால் அவற்றில் பல முறையாக இணைக்கப்படாமல் உள்ளன. சில இடங்களில் புவியியல் அமைப்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதே இடங்களில் தான் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்ற உண்மைகள், இதற்கு முன்பான மழை வெள்ள காலங்களில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை. வருடம்தோறும் மழை நீர் வடிகாலுக்காக ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் வீணாக்கப் படுகிறது என்பதையே உணர்த்துகிறது.
மக்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மழைநீர் வடிகால், மழை நீர் சேகரிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், மராமத்து பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு முறையாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் மட்டுமே ஒரு நிரந்தர தீர்வை எட்ட முடியும். கொரோனா பாதிப்பு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். சொந்த ஊரிலும் வேலை இல்லை எனும் சூழல். இதனை அடுத்து மத்திய அரசு ‘கரீப் கல்யான் ரோஜ்கர் அப்யான்’ எனும் திட்டத்தை
31 -05- 2020ல் செயல்படுத்தியது. இதன்படி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வாழுமிடத்தில், அவர்களுக்கு தெரிந்த தொழில்களில், 125 வேலை நாட்கள் ஈடுபடுத்தி, சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு 50,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தை உத்தரபிரதேச அரசு மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இதற்காக 9329.57 கோடி செலவிட்டு, 10,58,17,358 நபர் வேலை நாட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்காக எட்டு விருதுகளை பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் குறித்த ‘கந்தகி முக்த் பாரத்’ திட்டத்தை செயல்படுத்துவதில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது உ.பி அரசு.சில நாட்களுக்கு முன் ‘லஷ்கர் ஜிந்தாபாத்’ ‘சங்கிகளையும் மன்வாடிஸ்களையும் ஒடுக்க லஷ்கர் இ தொய்பா தாலிபான்களின் உதவியை நாட எங்களை தூண்டாதீர்கள்’ என மங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எழுதப்பட்டிருந்த வாசகம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் சங்க குடும்பத்தை சங்கிகள் என ஒரு சரார் அழைக்கின்றனர். மன்வாடிஸ் என்பது புது வார்த்தை. மனு தர்மத்தை கடைபிடிப்பவர்கள், முஸ்லிம்களுக்கு தலை வணங்காத ஹிந்துக்கள் போன்றோரை முஸ்லிம்கள் மன்வாடிஸ் என அழைக்கின்றனர் என சொல்லப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இது போன்ற பயங்கரவாத கூட்டத்தை அரசு வளர விடக்கூடாது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.