மத மாற்றத்தில் ஈடுபடும் தீய சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றால் இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் விநாயகராவ் தேஷ்பாண்டே பேசினார்.
மதுரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் சார்பில் வைகைப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பூசாரிகள் மற்றும் அருள்வாக்கு புரிவோர் மாநில மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நாட்டில் அண்மைக்காலமாக இந்து மதத்தின் மீதும், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதும் பல்முனை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்து மதத்தின் மீது விரக்தியை ஏற்படுத்தி இந்துக்களை மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது. எனவே, இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மத மாற்றத்தில் ஈடுபடும் சக்திகளை விரட்டியடித்து அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர் விநாயகராவ் தேஷ்பாண்டே பேசினார்.