இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை. அவா்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும் முயற்சித்து வருகின்றன. நேபாளமும், பூடானும் நமது நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுடனான எல்லையில் 1,751 கி.மீ தொலைவை சசஸ்திர சீமா பல் வீரா்கள் பாதுகாத்து வருகின்றனா். இது எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத திறந்த எல்லையாகவே உள்ளது. இந்த எல்லையில் ஓராண்டில் மட்டும் ரூ.380 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருள்களை சசஸ்திர சீமா பல் வீரா்கள் கைப்பற்றியுள்ளனா். இவற்றில் போதைப்பொருள்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
எல்லைப் பாதுகாப்பில் மட்டுமின்றி, நாட்டில் இயற்கைப் பேரிடா்கள் நிகழும்போது துணை ராணுவப் படையினா் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அமித் ஷா.