ஆம்பூரில் கொரோனா தடையை மீறி மாநாடு நடத்தியதாக பா.ஜ.கவினர் நூறுக்கும் மேற்பட்டோர் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் கிராமம் கிராமமாக ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம், கமல் நடத்தும் பிரச்சார கூட்டம், அழகிரி நடத்திய கூட்டம், முதல்வர் எடப்பாடியாரின் பிரச்சார கூட்டங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது, அங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லையே, பலர் முகக்கவசம் அணியாமல்தானே பங்கேற்றனர், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்தானே நபர்கள் கூடினர், அங்கெல்லாம் கொரோனா பரவாதா? என்பதை காவல்துறையும் தமிழக அரசும் விளக்க வேண்டும்.