ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் “நானில மேனிலைக்கே நமது சங்கப் பணி”

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ‘கார்யகர்த்தா விகாஸ் வர்க’ (2ம் ஆண்டு) 25 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா, ஜூன் 4 அன்று நாகபுரியில் நடந்தது, அதில் முகாமில் பயிற்சி பெற்றவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சிகளை செய்து காண்பித்தனர். முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன்ஜி பாகவத் நிகழ்ச்சியில் வழங்கிய பேருரையிலிருந்து:

 

நூற்றாண்டு வருடத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிறைவடைந்த நிலையில், இந்த கார்யகர்த்தா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்கிடையில், மக்களை சென்றடையும் நமது பிரச்சாரம் மிகவும் பலனளிக்கும் அனுபவத்தை கொணர்கிறது. சங்கத்திற்கு வாருங்கள், நேரில் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள், வெறும் பார்வையாளராக இருந்து விடாதீர்கள். நமக்குத் தடையாக இருக்க முயற்சிக்கும் சக்திகளை வெற்றிபெற விடாதீர்கள். உலகிற்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வெற்றி பெற்ற நாடாக பாரதம் திகழட்டும். நாம் நமது ஆயத்தங்களைத் துரிதப்படுத்த வேண்டும். பாரதம் அணி திரண்டு விழித்தெழுந்து வருகிறது. பாரதத்துக்கான நேரம் வந்துவிட்டது.
பாரதம் முன்னேறுவதற்கு சாதகமான சூழல்கள் நிலவுகின்றன. அதற்கேற்ப சூழ்நிலைகளும் மாறி வருகின்றன. தலைமை விருந்தினர் பிர்லாஜியும் இதை அறிவார். சூழ்நிலையை முன்கூட்டியே கட்டுப்படுத்துவது பற்றி சிந்திப்பவர்களால் மட்டுமே சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முடியும். உலகம் தனிமனித சுதந்திரம், சமுதாய சுதந்திரம், பிரபஞ்சத்தின் காப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக அறிந்திருக்கிறது, ஆனால் அவை அனைத்தையும் ஒன்றாகப் பேணி வளர்ப்பது எப்படி என்று அறியவில்லை. உலகிற்கு பாரதம் தேவை. ஏனென்றால் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் வளர்ச்சியை கற்பனை செய்ய பாரதத்தால் மட்டுமே முடியும்.
பாரதத்தின் நேரம் வந்துவிட்டது.

மோதல்களில் சிக்கி, சுயநலத்தில் மாட்டி, சுய வளர்ச்சிக்கும் பிரபஞ்ச அழிவுக்கும் இடையில் ஒரு நிலைகொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த உலகிற்கு பாரதம் மட்டுமே தேவை. இந்த அறிவு அனைத்தும் புத்தகங்களில் காணப்படுகிறது, விரிவுரைகளிலும் கற்பிக்கப்படுகிறது, ஆனால் அது கடைபிடிப்பாரில்லை. பழக்கத்திலிருந்தே பலன் கிடைக்கும்.

கலாச்சாரம், நாகரிகம், அறிவு, அறிவியல் ஆகியவை இருந்தபோதிலும், நாம் 1000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் துன்பப்பட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று சங்கம் சிந்தித்தது. ஹிந்து சமுதாயத்தில் நிலவும் அனைத்து வேறுபாடுகளையும் மீறி, அதனை ஒன்றிணைப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கியது.
இயற்கையோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் இயல்பை, தலைமுறை தலைமுறையாக மரபுகளிலிருந்து நாம் பெற்று வந்திருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நம்மை விடச் சிறந்தவர்கள் அல்ல. எண்ணிக்கையில் கூட அவர்கள் நம்மை விட அதிகம் அல்ல. அவர்கள் வெகு தொலைவிலிருந்து வந்து வென்றார்கள். எந்த வகையிலும் அவர்கள் சிறந்தவர்கள் அல்ல, அவர்கள் நம்மை விட மோசமானவர்கள். நம்முடைய சில விஷயங்களை நாம் பாதுகாக்கவில்லை; அவற்றை மறந்துவிட்டோம். நமது ஆயத்தத்தை நாம் இழந்தோம். அந்த ஆயத்தத்தை நாம் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். பாரதம் உருவானதற்கு ஹிந்துக்களே காரணம்.

சக்தி வாய்ந்தவையாக அறியப்படும் நாடுகள் தன்னிச்சையாகச் செயல்படுவதை நாம் காண்கிறோம். அவர்களால் ஒரு நாட்டைக் கைப்பற்றவோ, அதன் மீது குண்டு வீசவோ, அல்லது உலகின் எண்ணெய் விநியோகத்தைத் துண்டிக்கவோ முடியும். பாரதத்தை சக்திவாய்ந்த நாடாகக் கருதாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நாடாகவே பார்க்க வேண்டும்.

பாரதம் கட்டப்பட்ட அடித்தளம் உலகளாவிய சகோதரத்துவத்தின் மீது அமைந்துள்ளது என்பதையும், உலகம் ஒரு குடும்பம் என்பதையும் முழு உலகமும் காணட்டும். அப்போது அந்த நாடுகள், தங்களின் இயல்புக்கு ஏற்ப, பரஸ்பர நட்பின் அடிப்படையில் தங்கள் நாடுகளைக் கட்டியெழுப்பும். சங்கம் அத்தகைய சூழலை உருவாக்கவும், அத்தகைய சூழலை உருவாக்கக்கூடிய தொண்டர்கள் குழுவை உருவாக்கவும் விரும்புகிறது. நம் நாடு ஒரு சமய நாடு. நாம் நமது சமயத்தைப் பாதுகாத்து, நம் தேசத்தை உன்னத வளம் மிக்கதாக ஆக்க வேண்டும்.
சுய விழிப்புணர்வின் அடிப்படையில் சுயநலத்தையும், பாகுபாட்டையும் கைவிடும் மக்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாட்டு மக்களும், தங்கள் நாட்டிலும்
ஆர்.எஸ்.எஸ் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு நாம் சங்கப் பணி செய்வோம். நீங்கள் நேரடியாக சங்கக் கிளைக்கு (ஷாகா) வரலாம், அல்லது தன்னார்வலர்களுக்கு உதவலாம், அல்லது சமுதாய / தேச நலனுக்காக நீங்களாகவே ஏதேனும் ஒரு பணியைச் செய்யலாம், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.
முன்பை விடப் பெருமையுடன் பாரத அன்னை உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அருங்காட்சியை சுவாமி விவேகானந்தர் கனவாக கண்டார்; அதை விரைவில் நாம் நனவாக்குவோம்.
“பாரத தேசத்தில் இருந்தபடியே உருவாக்குங்கள், பாரதத்திற்காக உருவாக்குங்கள், ஒட்டுமொத்த உலகிற்காகவும் உருவாக்குங்கள்”.

பாரத இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் இதுதான்.
பாகவத் ஜியைப் பலமுறை சந்தித்து உரையாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பிலும், அவருடைய எளிமையும், பணிவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளன. வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் உறுதி, நமது நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.
83,000 கிளைகள், 60 லட்சம் தன்னார்வலர்கள், 1,77,000 சேவை அமைப்புகள் இன்னும் எண்ணற்ற பல அறியப்படாத சேவை நிறுவனங்கள் என அனைத்தும் ஒரே திசையில் செயல்படுவது முன்னெப்போதும் இல்லாத காட்சி. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே, பூகம்பம், வெள்ளம் என எத்தனையோ சவால்களின் போது ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் துணை நின்றிருக்கிறது.

சர்வதேச சவால்கள் நிறைந்த இக்காலத்தில், பாரதம் தனது பொற்காலத்தைத் தொடங்குகிறது. பிரிவினையால் பருத்தி விளைச்சல் பாகிஸ்தானில்; நூலுக்காக யார் கையையும் நம்பியிராமல் என் தாத்தா (ஜி.டி. பிர்லா) ரேயானுக்கு மாறி, அந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றினார். இது சுயசார்பு. இன்று, பாரதம் உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக விளங்குகிறது. நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். பாரதத்தை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லவே பொற்காலகட்டம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார்.
ஆதித்ய பிர்லா குழுமம் தனது செயல்பாடுகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. நாங்களும் ஆரம்ப / உயர் கல்வி, சுகாதாரம், சமுதாய மேம்பாடு, மகளிருக்கு அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். “வளர்ச்சி பெற்ற பாரதம்” என்ற கனவு பெரியது, அதை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு தொழில்துறைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு பாரதியருக்கும் இப்போது ஒரு மகத்தான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை பாரதம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மக்களே அதன் மிகப்பெரிய பலம். தேச நிர்மாணத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸி-ன் பங்களிப்பு குறித்த எனது பார்வை வலுப்பெற்றுள்ளது.

தமிழில்: டாக்டர் எம். விஜயா

 

ஸ்ரீ குமாரமங்கலம் பிர்லாவின் தலைமையுரை

(பாரதத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான குமாரமங்கலம் பிர்லா மதிப்புமிக்க ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர். அவரது தலைமையின் கீழ், இந்த நிறுவனம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தொழில்துறை, நிதிச் சேவைகள், தொலைத்தொடர்பு, உலோகங்கள், சிமெண்ட், ஜவுளி உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. கல்வித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ள இவர் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் (BITS) வேந்தர்;, ஆமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) முன்னாள் தலைவர். தொழில், கல்வி, தேச நிர்மாணம் ஆகிய துறைகளில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, பாரத அரசு 2023ல் இவருக்கு ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கௌரவித்தது).

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்

ஸ்ரீ கோபால்பாய் மாவ்ஜி கோராசியா (புஜ், குஜராத்), ஸ்ரீ திவ்யம் திரிபாதி (டெல்லி), பத்மஸ்ரீ பாரத் பூஷன் தியாகி (புலாந்த்ஷாஹர், உத்தரப்பிரதேசம்), மகாராஜா கஜ்சிங் (ஜோத்பூர்) மற்றும் மதிப்பிற்குரிய ஸ்ரீ யோகி பவனத்ஜி மகாராஜ் (ஸ்ரீ ரவிகுஞ்ச் ஆஸ்ரமம், ஜெய்ப்பூர்)