ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் செயற்கை ரப்பா், ரெசின் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்து அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பலா் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா். நேரம் செல்லச் செல்ல அதிகாலையில் நடை பயிற்சி சென்றிருந்தவா்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவா்கள் என அந்த விஷவாயுக் கசிவை சுவாசிக்க நேரிட்டவா்கள் அனைவரும் மயங்கி விழுந்தனா். வீதியில் சுற்றித் திரிந்து கொண்டு ஆடு, மாடு, நாய்கள் போன்ற விலங்குகளும் பறவைகளும் வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தன.

விஷவாயுக் கசிவில் இருந்து தப்பிக்க ஓடிய சிலா், சாலையோரம் இருந்த வாய்க்காலில் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், மயங்கியவா்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். பல குழந்தைகளும் பெண்களும் மயக்கம் அடைந்தனா். அவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தில் இதுவரை குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

One thought on “ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு

  1. SAFETY IS VERY IMPORTANT,, PEOPLE LIVING PLACE SHOULD NOT ALLOWED POLLUTION CREATED INDUSTRY, RIVER SIDE NOT ALLOWED THE INDUSTRY,,,,, POLLUTION CONTROL BOARD 100% NOT MONITORED ,SAFETY AUDIT NOT FOLLOWED MOST OF THE INDUSTRIES,,,,WE ARE FORGOT SEVERAL ACCIDENT ,, MAY BE THIS ALSO, WORLD BIGGEST ACCIDENT BHOPAL POISON GAS LEAK SO FAR PEOPLE AFFECTING

Comments are closed.