அல்காரிதம் வைத்து விளையாடும் சமூக வலைத்தளங்கள் – கடிவாளம் கண்டிப்பாக தேவை

கடந்த ஜூலை மாதம் கரப்பான் பூச்சிகள் போராட்டம் என்ற பெயரில், தில்லியில் தின்று தீர்த்துக்கொண்டிருந்த போது உண்ணாவிரதம் என்று சோனம் வாங்சுக்கைப் பலியாக்க எண்ணினர் என்று உளவுத்தகவல் வந்தது. வாங்சுக்கை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியது மத்திய அரசு. முதல் திட்டம் தோற்ற நிலையில், ராகுல்காந்தி பிரதமர் வீட்டருகே போய் வங்கதேசம், இலங்கையில் நடந்தது போலக் கலவரம் செய்து சூறையாடத் திட்டமிட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை அகற்றிவிட்டது.
இந்நிலையில் ஜூலை 23 அன்று, பிரதமர் மோடி ஒரு செல்ஃபி விடியோ போட்டு மாணவர்களிடம் போராட்டத்தை விட்டுவிடச் சொல்லியும், அரசு கேள்வித்தாள் வெளியானது பற்றிக் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இனி வெளியாகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதாகவும் சொன்னார். இதைக் கண்டு மாணவர்களும், பெற்றோரும் மனநிறைவடைந்தனர்.
ஆனால், ஜூலை 28 அன்று 12.30 முதல் 5 மணி வரை பிரதமரின் விடியோ ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது. இது குறித்து புகார்களும், விமர்சனங்களும் எழுந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்துவிட்டோம் என்று இளித்தது மெட்டா. நம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விளக்கங்கெட்ட வாதத்தை ஏற்க முடியாது என மறுத்து, மெட்டாவின் தொழில்நுட்பக் கோளாறு இந்தியாவில் மட்டும் நிகழுமா? என்று கேள்வி எழுப்பியது.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு தகவலைத் தடுப்பது இது (geo-block) என்று குற்றம் சாட்டியது. மெட்டாவின் அமெரிக்கத் தலைமை தில்லிக்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றார், தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் கிருஷ்ணன். மெட்டாவின் உள்ளூர் நிர்வாகிகள் அங்கே போய் துரை வருவது எல்லாம் நடக்குமா? நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம், விட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள். ஆகஸ்டு 3 அன்று, பாராளுமன்றத் தகவல் தொழிநுட்ப நிலைக்குழு கூடியது. கூட்டம் முடிந்து வந்த அதன் தலைவர் நிஷிகாந்த் துபே, அமெரிக்காவில் தான் உலகளாவிய தலைமையகம் உள்ளது. அவர்கள் வந்து விளக்கம் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும். 3 நாட்களுக்குள் மன்னிப்பு, இல்லை என்றால் ஃபேஸ்புக்கின் “Safe Harbour” அந்தஸ்து பறிக்கப்படும் என்று சொன்னார். Safe Harbour அந்தஸ்து என்பது தளத்தில் பகிரப்படும் தகவல்களுக்கு மெட்டா நிறுவனத்தைப் பொறுப்பாக்காமல், தகவலைப் பகிர்ந்தவர்களை மட்டும் கேள்வி கேட்கும் சட்டப்பிரிவு. அந்த அந்தஸ்து போனால், யார் என்ன எழுதினாலும் மெட்டா பொறுப்பேற்க வேண்டும்.
அகஸ்ட் 5 அன்று, மெட்டாவின் உலகவிவகாரத் தலைவர் ஜோயல் காப்ளன் வந்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மன்னிப்புக் கேட்டார். மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பர்க் ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படும் விடியோக்களை ஏன் நீக்குவதில்லை என்று கேட்டபோது பதில் இல்லை. விரைவில் நீக்குகிறோம் என்றார்கள். சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை முன்னிலைப் படுத்தவும் பரப்பவும் மிகப்பெரியத் தொகை கொடுக்கப்பட்டதாக மெட்டா ஒப்புக்கொண்டது. பல தகவல்களை மறைக்கவும், இது பயன்படுத்தப்பட்டது. இளைஞர்களை ஈர்க்க பல கணினி விதிமுறைகளில் தகிடுதத்தங்கள் செய்ததாக மெட்டா ஒப்புக்கொண்டது.
இந்த விதிமுறைகள், பிரதமரின் வீடியோ போனதால் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் பல காலங்களாக, பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பாரதத்துக்கு எதிராக, ஹிந்து தர்மத்துக்கு விரோதமாகக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. இவற்றை மறுத்து, கருத்துச் சொன்னால் community standard என்று நீக்குவார்கள். ஏன் இப்படி?
இந்த மெட்டா, ட்விட்டர் (எக்ஸ்), சேட் ஜிபிடி உள்ளிட்ட பலவும் இடதுசாரிகள், ஹிந்து விரோதிகளால் நிரம்பி இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் புகார் செய்தால், ஹிந்து ஆதரவுக் கருத்து என்றால் உடனே நீக்கவும், ஹிந்து விரோத, பாரதத்துக்கு எதிரான கருத்து என்றால், உடனே ஓவர் டைம் போட்டுப் பரப்பவும் செய்வார்கள்.
சமீபத்தில் தேசப்பிரிவினை பற்றிய ஆவணங்களைத் தேடிய போது, பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் அனுபவித்த கொடுமைகள் என்று தேடினால் தகவல் தர மறுத்தன சமூக ஊடகங்கள். அதீத முயற்சிக்குப் பிறகு பாகிஸ்தானில், முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று படம் போட்டுக் கொடுத்தது சாட் ஜிபிடி. என்னய்யா கொடுமை இது?
பாகிஸ்தானில் எப்படி அவர்கள் கொடுமைப்படுத்தப் படுவார்கள்? உட்பிரிவு சண்டை என்றால் ஹிந்துக்களா பொறுப்பு? இதைக் கேட்டால் நீ மதவாதம் பேசுகிறாய், உனக்குத் தகவல் தர முடியாது என்று மறுத்து மூடிக்கொண்டது. பிறகு கொடுத்த படத்தை, பழைய செயலிகளை வைத்துப் பட்டி பார்த்து வேண்டிய தகவல் பகிரப்பட்டது. வந்தே மாதரம் பாட்டைப் பாடும் குழு என்று கேட்டால், ஒரு இஸ்லாமியரைச் சேர்த்துப் படம் போடுகிறது ஏ.ஐ ஏன்? அவர்கள் பாடமாட்டார்களே? தேசியப் பாடலை அவர்கள் இல்லாமல் படம் போட்டுத் தரமுடியாதாம். என்னய்யா கொடுமை?

இதற்கெல்லாம்
என்ன தீர்வு?

இந்த நிறுவனங்களில் ஹிந்துக்கள் சேர்ந்து பணியமர்ந்து, இவர்களின் ஆட்டத்துக்கு எதிராக நியாயப்படி வேலை செய்யலாம். ஆனால் இது அத்தனை சுலபமல்ல.
நமக்கான உள்ளூர் சமூக வலைத்தளங்கள் தேவை. ஸ்ரீதர் வேம்பு தனது நிறுவனத்தில் இப்படி ஒரு செயலி கொண்டு வந்துள்ளார். அதைப் பயன்படுத்த ஆரம்பித்து மெல்ல இந்தத் தளங்களைவிட்டு வெளியேறலாம். இவர்கள் நம் மக்கள் தொகை அதிகம் என்பதால், சந்தை பெரிது என்று உள்ளே வருகிறார்கள். நம் நாட்டில் தொழில் செய்யவேண்டும் என்றால், நம் நாட்டில் சட்டதிட்டங்களை மதிக்கவேண்டும். பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும். அது இல்லாத நிலையில் இவர்களை விட்டு விலகினால் வியாபாரம் படுக்கும் என்பதால் வழிக்கு வருவார்கள். இதில் நமது முயற்சியும் தேவை, அரசின் நடவடிக்கைகளும் அவசியம்.

– கட்டுரையாளர்: அருண் பிரபு