மயிலாடுதுறை அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் சுவாமி சிலைகள் 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, லண்டனுக்கு கடத்தப்பட்டன. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முயற்சியால் பாரத தூதரகம் அவற்றை லண்டனில் இருந்து மீட்டது. சிதிலமடைந்த கோயில்கள் குறித்த வழக்கில் ஹிந்து அறநிலையத்துறை 127 கோயில்கள் சேதமடைந்துள்ளன. 8 கோயில்கள் எங்கிருக்கின்றன என்றே தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் பிரதான கதவுகள் சேதமடைந்து பல நாட்கள் ஆகின்றன. அறநிலையத்துறை அதை கயிறு கொண்டு கட்டி வைத்திருக்கிறது. இந்த கோயிலின் மாத உண்டியல் வருவாய் மட்டும் சுமார் 70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இவைதான் அறநிலையத்துறை கோயில்களை பராமரிக்கும் லட்சணம்.