அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? அரசு பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா? போன்ற விவரங்களை அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.