அரசவைப் புலவர் பதவியை மறுத்து பொருத்தமானவருக்கு தர விரும்பிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27, 1876ல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கவிஞர். அவர் வாழ்ந்த பகுதி திருவாங்கூர் மன்னர் ஆட்சி செய்த பகுதி. ஆகவே, தொடக்கக் கல்வியில் மலையாளம்  பயின்றார். அதன் பிறகு தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக சாந்தலிங்க தம்பிரான் என்ற துறவியிடம் தமிழ் பயின்றார்.

பக்தி பாடல்கள், இலக்கியம், குழந்தை பாடல்கள், இயற்கை, வாழ்வியல், போராட்டம், தேசியம், போன்ற அனைத்து துறைகளிலும் பாடியவர். அந்தக் காலத்திலேயே M.A.,  பயின்றார். நாகர்கோயில் ஆசிரியராக பணியாற்றினார் பின்னர் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் பணியாற்றினார், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

எட்வின் ஆர்னால்ட் அவருடைய  பாடல்களை தமிழில் எழுதினார். உமர்கய்யாம் பாடல்களை தமிழில் எழுதினார். மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். மனோன்மணியம் மறு பிறப்பு என்பது இவரது திறனாய்வு கட்டுரை.  சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேரகராதி உருவாக்கியபோது அதில் உதவியாளராக இருந்தார்.

கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் போன்ற நூல்களில் ஏட்டுப் பிரதிகளை தமிழில் தொகுத்தார். காந்தளூர் சாலை ஆய்வு நூலை எழுதினார். பல விருதுகளை பெற்றுள்ளார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு பேரூரில் நினைவாலயம் உள்ளது. தமிழுக்கு பெருமை சேர்த்த மாபெரும் தலைவர்களில் கவிமணியும் ஒரு புகழ்மணி ஆவார்.

மகாகவி பாரதியார் பற்றி கவிமணி பாடிய பாடல் வரிகள் முத்துக்கு முத்தாக”, “பாட்டுக்கொரு ஒரு புலவன் பாரதியடா”, “அவன் பாட்டை பண்ணோடு ஒருவன் பாடினானடா,  கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது உள்ளத்து உள்ளது கவிதை இன்பம், ஊற்றெடுத்தது கவிதை’ என்று பாடுகிறார்.

கவிமணியின் பசு பாடல் குழந்தைகள் மனதில் ஆழ இடம் பெற்றது.

தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு

அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு

உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

என்பது அப்பாடல்.

உழைப்பின் பெருமையை மிக அற்புதமாக பாடுகிறார்.

அல்லும் பகலும் உழைப்பவர் யார்

உள்ளத்து அன்பு ததும்பி எழுபவர் யார்….

கல்லும் கனியும் கசிந்துருகி

 தெய்வ கற்பனை வேண்டி தொழுபவர் யார்……

என்பது பெண்களின் பெருமையை பறைசாற்றும் பாடல் இவருடைய பாடல் திரைப்படங்களிலும் வந்துள்ளன.

கோயில் முழுதும் கண்டேன்

 உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்

தேவாதி தேவனை நான் தேடினும் கண்டிலனே….

என்பது ஒரு திரைப்பட பாடல்…..

இவர் வாழ்ந்த காலத்தில் சாதிச் சண்டைகள் ஓங்கி இருந்தன…

அதனை கண்டிக்கும் வண்ணம்

கீரையும் பாம்பும் ஆய் சண்டையிட்டு

ஜாதி கீழ் என்றும் மேல் என்றும்

நாட்டி விட்டு பாரதத்தாய் பெற்ற மக்கள் என்று

நிதம் பல்லவி பாடி பயன் எதுவும் என்று இல்லை

என்று ஜாதி சண்டையை கோபத்தோடு பாடுகிறார்.

உயிர்களை கொல்வதை கடுமையாக எதிர்த்தார். இளம்பருவத்தில் ஒரு கோயிலில் திருவிழா காண சென்றார். அங்கே ஆட்டினை வலி கொடுக்கும் காட்சியை கண்டார். உள்ளம் உருகியது கவிஞருக்கு. அதன் விளைவாக “கொல்லாமை” தலைப்பில் பல பாடல்கள் எழுதினார்.

கவிமணிக்கு அண்ணாமலை செட்டியார் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது பொன்னும், பொருளும் பரிசாகக் கொடுத்தனர். அதனை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் திருவனந்தபுரத்தில் தமிழ் வளர தந்துவிட்டார்.

கவிமணிக்கு அரசவைப் புலவர் பதவி வழங்க, அப்போதைய அரசு விரும்பியது. ஆனால் தம்மைக் காட்டிலும் நாமக்கல் கவிஞரே அப்பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறி அவரை அப்பதவியில் அமர்த்தி விட வழிவகை செய்தார்.