அயோத்தி வழக்கில் தீர்ர்பு அளித்த உச்ச நீதிமன்றம், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம். இந்த நிலம் மற்றும் கோவிலை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்’ என்று கூறியது. அதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தினேஷ் கூறியதாவது:புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றார்