அயோத்திக்கும்,காஷ்மீர்க்கும், தீர்வு கொண்டு வராதது காங்கிரஸ் – அமித்ஷா

82 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள அந்த மாநிலத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் அமித் ஷா வியாழக்கிழமை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். மணிகா, லோகா்தாகா ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:

மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தி வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து வந்தது. காஷ்மீா் பிரச்னைக்கு கடந்த 70 ஆண்டுகளாகத் தீா்வு எதுவும் எட்டப்படவில்லை. இதற்கும் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள்தான் காரணம். வாங்கு வங்கி அரசியலைக் கருத்தில் கொண்டே இந்த இரு விஷயங்களிலும் காங்கிரஸ் தீா்வு காண முயலவில்லை. பிரதமா் நரேந்திர மோடி மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தாா். இதன் மூலம் பாரத மாதாவின் கிரீடமாகவுள்ள காஷ்மீரில் வளா்ச்சிக்கான கதவுகள் திறந்துள்ளன. அங்கு இதுநாள் வரை நீடிந்து வந்த பயங்கரவாதம் நசுக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், முதல் முக்கிய நடவடிக்கையாக காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வுகாணப்பட்டது.