கேரள தங்கக்கடத்தல் வழக்கு சூடுபிடித்து வருகிறது. பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள், அமைச்சரின் மகன்கள், முதல்வர், அவரின் நண்பர்கள் என பலரின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன. இதில் தற்போது கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் என்.ஐ.ஏ விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். இந்த தங்கக் கடத்தல் பணம் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. முதல்முறையாக ஒரு அமைச்சரை விசாரிக்கிறது என்.ஐ.ஏ. இவர் ஏற்கனவே குரான் புத்தக வினியோகம் தொடர்பாக அமலாக்கத்துறையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.