இயற்கையான நட்பு

நம் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை சிறப்பிக்க, சர்வதேச தொலைகாட்சியான ஐ–24 இஸ்ரேலுடன் பாரதத்தின் 70 ஆண்டு நட்பு என ஒரு குறும்படம் வெளியிட்டது. அதில் நமது பாரதமும் இஸ்ரேலும் இயற்கையான நட்பு நாடுகள், அதற்கான காரணங்கள் குறித்து சில சுவாரசியமான சில விஷயங்கள் கூறப்பட்டன. நமது பாரதம் 1950-ல் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தது. இஸ்ரேல் சென்ற முதல் பாரத பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பில் ஒற்றுமை போன்ற பல சுவாரசிய குறிப்புகள் அதில் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்த்துள்ளனர்.

உலகின் பல பகுதிகளுக்கு அகதிகளாக குடியேறிய இஸ்ரேலியர்கள் அங்கு கொடுமைகளை சந்தித்தனர். ஆனால் பாரதத்தில் மட்டும்தான் அவர்கள் அமைதியாக வாழமுடிந்தது.