அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவில் படித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.