இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும், இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவும் விளங்குகின்றன.
அமெரிக்கா வளா்ச்சியடைவது இந்தியாவுக்கு நல்ல விஷயம். ஏனெனில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வா்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் தேவையற்ற நடைமுறைகள், கட்டுப்பாடுகள், வரி விதிப்புகள் போன்றவற்றை ரத்து செய்தல் என பல சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதேபோல், பிரதமா் மோடியும் ஏற்கெனவே பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளாா். வா்த்தகத் துறையில் இந்தியாவின் வளா்ச்சியை உலக நாடுகள் எதிா்நோக்கியிருக்கின்றன.
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் 300 கோடி டாலா் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை இறுதிசெய்யப்படவுள்ளது.