சம்பாதித்தது போதும், இந்தியா வந்து விடு. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழலாம். பேரக்குழந்தைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் பல என் ஆர் ஐ பெருமக்களை பெற்ற பெற்றோர்களின் தொடர் விண்ணப்பங்கள். ஸ்கைப்பில், நேரில், இ மைலில் என்று மகன்/மகள்களைக் கெஞ்சிக்கூத்தாடிக்கொண்டு இருக்கும் படலம் பல வீடுகளில் தொடர்கதை. பொறுமை நிறைந்த மற்றொரு கதை.
குழந்தைகள் சம்பாதிக்கற வயசு, மேற்படிப்புப் படிக்க வசதிகள் அங்கே அதிகம், நாங்கள் சீனியர் சிடிஸின் இல்லங்களில் செட்டில் ஆகிறோம் என்று வெளியில் சந்தோஷத்துடனும், உள்ளே அடக்க முடியாத துக்கத்துடனும் சொல்லும் பெற்றோரும் உள்ளனர்.சஷ்டியப்த பூர்த்தியைக் கூட இங்கு வந்து ஹோட்டலில் கொண்டாடி, கொண்டாட்ட நிகழுவுகளை மீண்டும் வெளிநாடு சென்று நட்பு வட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளோம் பார் என்கிற ரீதியில் காட்டுவது பார்க்க, கேட்க நன்றாகவே இருக்கலாம். ஆனால், தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பேரன், பேத்தி, என்று அருகருகே இருந்து எல்லோரையும் அரவனைத்துச் செல்கின்ற/ வாழ்கின்ற வாழ்க்கை
மிஸ்ஸிங் இல்லையா. இவ்வளவு ஏன்? கொரோன பலருக்கும் ஏற்படுத்திய இன்னல்களில் ஒன்று: வெளிநாட்டில் மாட்டியிருந்தால் அவசரத்திற்கு இந்தியா வர முடியாத நிலைமை. இதன் விபரீதம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. சில குடும்பங்களில் தாயார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, நல்ல வேலையாக அருகில் இருந்த சொந்த பந்தம் கவனித்துக் கொண்டது. ஆனால் இறுதிக் காரியங்கள் நடத்த மகன் வர முடியாத நிலை. சொந்த பந்தங்கள் தான் கொள்ளி போட்டு சற்றே ஆறுதல் தந்தன.
ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |தஸ்ய
நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்
கயா நதிக்கரைதனில் தாய்க்கு வைக்கும் பிண்டங்கள் மொத்தம் 16 . அதில் ஒரு மந்திரம் இது. நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன் உயிரோடு உலவி, நம் சந்தோசம் ஒன்றையே நினைத்து, இறைவனிடம் பிரார்த்திக்கும் பெற்றோர் அவர்களது கடைசிக் காலத்தில் அவர்கள் அருகில் இருந்து, அவர்களுக்கு கடமைகள் செய்ய மகன்கள்/மகள்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாயார் தெய்வம் போன்றவர். அவருக்குச் செய்யும் உதவிகள்/நன்மைகள் நமக்கு அடுத்த ஜன்மாவில் நல்ல பிறவியைக் கொடுக்கும்.
வெளிநாடுகளில் கோடி கோடியாக சம்பாத்தித்த சிலர் பின்னர் இங்கு வந்து வசதியாக வாழலாம் என்று நினைத்திருப்பர். வருடம் ஆக ஆக பணம் சம்பாதிக்கும் சிந்தனை வளர்வதுதான் அதிகம் ஆகிறதே தவிர, எத்தனை பேர், சம்பாதித்தது போதும்,. நம்மை ஈன்ற அப்பா அம்மாவை கவனித்துக்கொள்வோம், நம் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வோம் என்கின்ற நற்சிந்தனை என்னும் காலத்தில் இருங்க விழைகின்றனர் ?” மனம் தான் பந்தத்திற்கும் மோக்ஷதிற்கும் காரணம். மனம் ஆசைகள் நிறைந்தது . ஆசைகள் அதிகரிப்பதால் தேவைகள் அதிகமாகிறது. இதனால் மனக்கஷ்டம். தேவைகளை குறைத்துக்க்கொண்டால் மனம் நிம்மதி யாகிறது.ஆசைகளை அடக்கினால் மனம் அடங்கும்.” அன்னையர் தினம் கொண்டாடுங்கள். யார் வேண்டாம் என்றது. ஆனால் பெற்றோரை அவர்களது இறுதி மூச்சு வரை கூட இருந்து காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்ற மந்திரத்தை முதலில் மனனம் செய்து பின்பற்றுவது சாலச் சிறந்தது. ஏதோ வருடத்திற்கு ஒருமுறை அவர்களைச் சந்தித்து அன்பளிப்பு கொடுத்து வாழ்த்தைக் கூறிவிட்டால் நம்மை ஈன்றோர்க்கு நாம் செய்ய வேண்டிய அரும்பணியைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டதாக பெருமிதப்பட்டுக் கொள்வது அபத்தம்.
Yes. This is fact. My son told me that after finishing MS degree, i will return after 2 years and i will be in India. What a disappointment. He went 12 years back and now settled in abroad. A great company. Great salary. Going to purchase a house there for 4.5 crores…..