அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் ஹிந்துக்கள் சில கேள்விகளை முன் வைக்க வேண்டும்

ரும் 2016 சட்ட மன்ற தேர்தலில், வாக்கு கேட்க வரும் அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் ஹிந்துக்கள் சில கேள்விகளை முன் வைக்க வேண்டும்.

* templ அரசின் பிடியில் உள்ளது.  முஸ்லீம்களின் மசூதி, தர்க்கா சோத்துக்கள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வசமே உள்ளது,  இஸ்லாமியர்களை போலவே கிறிஸ்துவர்களின் சோத்துக்களும்  அவர்களின் பாரமரிப்பில் உள்ளது.

தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் 36,488 கோயில்களும், 56 திருமடங்களும், 58 பிரம்மாண்ட கோவில்களும், மற்றும் 17 சமண கோயில்களும் உள்ளன.  இந்த கோவில்களுக்கு சோந்தமாக 1,83,669 ஏக்கர் விளை நிலமும், 2,18,226 ஏக்கர் தரிசு நிலங்களும், 20,746 ஏக்கர் மானாவாரி நிலங்களும், இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஆனால்  1986-ம் ஆண்டு வெளியிட்ட அறநிலையத் துறை கொள்கை விளக்க குறிப்பில் மேற்படி கோவிலுக்கு சோந்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக செதி வெளியிட்டது.  கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 47,000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதை வேட்பாளரிடம் சுட்டிக் காட்டுங்கள்.

* ஹிந்து அல்லாதவர்களுக்கு கோயில் நிலங்களை வாடகை அல்லது குத்தகைக்கு விடக் கூடாது என்று ஆணையிருந்தும், தமிழக அரசு ஹிந்து அல்லாதவர்களுக்கு கோயில் இடங்களை வாடகைக்கு விட்டுள்ளது.   உதாரணமாக சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வர் கோயிலுக்குச் சோந்தமான ஒரு மனையை தி சால்வேஷன் ஆர்மி என்கிற கிறிஸ்துவ நிறுவனம் அனுபவித்து வருகிறது. இந்த நிறுவனம் கோவிலுக்கு கொடுக்க வேண்டிய வாடகை பாக்கி ரூ.5.30 லட்சம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிறுவனம் ஹிந்துக்களை  கிறிஸ்துவர்களாக மதம் மாற்றும் செயலில் ஈடுபடுகிறது.  ஹிந்துக்களை மத மாற்றம் செயும் ஒரு கிறிஸ்துவ நிறுவனம் ஹிந்து கோயிலின் சோத்துக்களை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. இது பற்றி உங்கள் வேட்பாளரிடம் கேள்வி எழுப்புங்கள்.

* பழனி கோயிலின் பங்குனி உத்திர திருவிழாவின் போது வெறும் 20 நாட்களில் வசூலான தொகை ரூ.1,27,67,000 என்றும் ஒரு ஆண்டின் வருமானம் ரூ72.15 கோடி என்றும் அரசு தெரிவித்தும் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டுமா என்பதை ஹிந்துக்களாகிய நாம் தான் வேட்பாளரிடம் கேட்க வேண்டும்.

* ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த ஆட்சியாளர்கள் மீன்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.  எனவே இவர்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர் திரு. கிருஷ்ணசாமி ரெட்டியார், குன்றகுடி அடிகளார் தலைமையில் அமைந்த குழு அளித்த பரிந்துரையின் படி ஹிந்து ஆலயங்களை நிர்வகிக்க ஆன்றோர், சான்றோர், ஹிந்து மதத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கலாம்.

* உச்சநீதி மன்றமும், ஆந்திரா பிரதேசத்தின் உயர்நீதி மன்றமும் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என தெளிவாக தீர்ப்பு கொடுத்த பின்னால், தமிழக அரசானது குறிப்பாக கருணாநிதியின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டுப் பங்கில் 7 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்கியது சரியா என்பதையும் கேட்க வேண்டும். இது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்த முடிவாகும்.    இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் தங்களுக்கு என தனி ஒதுக்கீடு கேட்டவுடன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

* தமிழகத்தில் பள்ளி ஆரம்பிக்க வேண்டுமானால் ஹிந்துவிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏராளம். ஆனால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பள்ளி துவக்கப்பட வேண்டுமானால் எவ்வித விதி முறைகளும் சுட்டிக் காட்டப்படாமல் உடனடியாக அனுமதி அளிக்கப்படும்.   இதைப் போலவே சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது, அவர்களின் விருப்பபடி, தங்களது மதத்தைச் சார்ந்தவர்களை மட்டும் நியமித்துக் கொள்ளலாம்.  ஆனால் ஹிந்து நடத்தும் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்தவர்களையும் சிறுபான்மையினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மத பிரச்சாரம் செய அனுமதி உண்டு.  அவர்களின் பாட திட்டத்தில் மத வகுப்பும் உண்டு.  ஆனால் ஹிந்துக்கள் நடத்தும்  பள்ளியில் ஹிந்து மத பிரச்சாரத்திற்கும் ஹிந்துக்களின் மேன்மைகளை விளக்குவதற்கும் அனுமதி கிடையாது. இதை உங்கள் வேட்பாளரிடம் சுட்டிக் காட்டுங்கள்.

* ஹிந்து ஆலயங்களுக்கு அருகில் சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் அமைத்து கொள்ளலாம், பின்னர் அவர்களின் வழிபாட்டிற்கு இடையூறாக இருப்பதாக கூறி பல்வேறு இடையூறுகளை செதால் கூட தட்டிக் கேட்க எந்த சட்ட மன்ற உறுப்பினரும் வருவதில்லை.  ஹிந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலம் செல்ல அனுமதி மறுப்பதும், கடந்த ஐம்பதாண்டு கால கழகங்களின் ஆட்சியில் நடைபெறுகிறது.

இம்மாதிரியாக ஹிந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது நன்றாக தெரிந்தும், அதை தட்டிக் கேட்க எந்த சட்ட மன்ற உறுப்பினரும்  முன் வருவதில்லை.  கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் எனக் கூறி தப்பித்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பார்கள்.  இதற்கு  முடிவு கட்ட வேண்டிய சக்தி வாக்காளராகிய உங்கள் விரல் நுனியில்!