அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) வாராந்திர புள்ளி விவரத்தின்படி, அக்டோபர் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின்அந்நியச் செலாவணி கையிருப்பு 640.1 பில்லியன் டாலரிலிருந்து 1.919 பில்லியன் டாலர்கள் அதிகரித்து தற்போது 642.019 பில்லியன் டாலராக உள்ளது. இந்த அந்நிய செலாவணி இருப்புக்கள் வெளிநாட்டு செலவாணி சொத்துக்கள் (FCAகள்), தங்க கையிருப்பு, சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நாட்டின் கையிருப்பு நிலை ஆகியவற்றை உள்ளடக்கியது.