அதிகரிக்கும் கடன் சுமை

ஏற்கனவே தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 2.6 லட்சத்திற்கும் அதிகமான கடன் உள்ளதாக தமிழக நிதியமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையே தமிழக அரசு அடைக்க முடியுமா முடியாதா என தெரியாத சூழலில், நடப்பு நிதியாண்டில் 92 ஆயிரத்து 482 கோடி ரூபாய் கடன் வாங்க மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது என, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.5,77,987 கோடியாக உயரும். பழைய கடனையே அடைக்க வழி தெரியாமல் தினறும் தி.மு.க அரசு, வரும் 8 மாதங்களில் மட்டுமே வாங்கவுள்ள இந்த மாபெரும் கடனை எப்படி அடைக்கப்போகிறது?